94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி "தூத்துக்குடியில் 110,பிரிவின்‌‌‌ கீழ்‌‌‌ ரவுடிக்கு சிறை இன்ஸ்பெக்டர் பத்மாவிற்‌‌‌க்கு எஸ்.பி பாராட்டு...

“தூத்துக்குடியில் 110,பிரிவின்‌‌‌ கீழ்‌‌‌ ரவுடிக்கு சிறை இன்ஸ்பெக்டர் பத்மாவிற்‌‌‌க்கு எஸ்.பி பாராட்டு…

தூத்துக்குடி – ஜீலை – 27,2021

நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்த பிணைப்பத்திரத்தை மீறி வன்முறையில் ஈடுபட்ட பிரபல ரவுடி குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி சிறையில் அடைப்பு – துரிதமாக நடவடிக்கை எடுத்த நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், அழகப்பபுரம் தெற்குத் தெருச் சேர்ந்த விஜயபாண்டி மகன் முத்துப்பாண்டி (21) என்பவரை நாலாட்டின்புதூர் காவல்நிலைய போலீசார் 15.02.2021 ஆகிய அன்று குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்பிரிவு 110ன்படி கோவில்பட்டி உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தி, நீதிமன்றத்தில் மேற்படி முத்துப்பாண்டியிடம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் 1 வருட காலத்திற்கு குற்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று பொது அமைதியைக் காப்பதற்கு பிணைத்தொகை ரூபாய் 15,000/- நிர்ணயம் செய்து 15.02.2021 அன்று பிணைப்பத்திரம் எழுதி பெறப்பட்டது.

மேற்படி பிணைப்பத்திரம் பெறப்பட்ட 1 வருட காலம் முடிவதற்கு முன் ஐந்து மாதத்தில் கடந்த 14.07.2021 அன்று இரவு அழகப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி மகன் செல்வராஜ் என்பவரை குடிபோதையில் அசிங்கமாக பேசி, அரிவாளால் வெட்;டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி முத்துப்பாண்டி வன்முறையில் ஈடுபட்டு குற்றம் புரிந்துள்ளார்.

ஆகவே தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்பிரிவு 110ன்படி எழுதிப் பெறப்பட்ட பிணைப்பத்திரத்தின் அடிப்படையில் மேற்படி முத்துப்பாண்டி மீது நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பத்மாவதி முத்துப்பாண்டி மீது குற்ற விசாரணை நடைமுறைச்சட்டப்பிரிவு 110ன் படி நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதனடிப்படையில் மேற்படி முத்துப்பாண்டி மீது குற்றவியல் நடைமுறைச்சட்டம் 110ன் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டு நடைமுறையில் இருக்கும் தருவாயில் மீளவும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் உள்ளதாலும், பொது மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டியும், எதிர்காலத்தில் இதுபோன்று விரும்பத்தகாத நிகழ்வு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு நல்ல நோக்கத்துடன் மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக பொது அமைதிக்கு எவ்வித பங்கம் நேரக்கூடாது என்பதால், கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக வைக்கப்பட்டுள்ள முத்துப்பாண்டியை தற்போதைய அசாதாராண சூழ்நிலையை கருத்தில் கொண்டு குற்ற விசாரணை முறைச் சட்டம் 122(1)(B)யின்படி 15.02.2022 வரை அல்லது சட்டப்படி வேறு நீதிமன்ற ஆணைப்படி விடுவிக்கப்படும் வரை சிறைக்காவலில் நீட்டிக்கபட்டு கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

எனவே தற்போது தூத்துக்குடி மாவட்ட சிறைச்சாலை, பேரூரணி சிறைச்சாலையில் விசாரணை கைதியாக வைக்கப்பட்டுள்ள முத்துப்பாண்டி சிறைக்காவல் நீட்டிப்பு செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளார். துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த நாலாட்டின்புதூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பத்மாவதி மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌‌‌ எஸ்.ஜெயக்குமார் பாராட்டினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்