79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி ,முறப்பநாட்டில் ஒருவர் கொலை கொலையாளிகள் இருவர் கைது - மேலும் சம்பந்தபட்டவர்களை கைது...

தூத்துக்குடி ,முறப்பநாட்டில் ஒருவர் கொலை கொலையாளிகள் இருவர் கைது – மேலும் சம்பந்தபட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்க -எஸ்.பி உத்தரவு

தூத்துக்குடி – ஜீன் -16,2021

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – கொலையில் ஈடுபட்ட இருவர் கைது – எதிரிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தனிப்படை அமைத்து உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டம் கீழபுத்தநேரி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுடலை மகன் மாரியப்பன் (50). இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு கீழபுத்தநேரியை சேர்ந்த பண்டாரம் மகன் மூக்கையா (எ) சண்முகநாதன் (54) என்பவரது சகோதரரான ஐக்கோர்ட் மாரியப்பன் என்பவரை கொலை செய்துள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக நேற்று (15.06.2021) மாரியப்பன் தனது இருசக்கர வாகனத்தில் வசவப்பபுரம் செந்நெல்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மூக்கையா (எ) சண்முகநாதன் (54) மற்றும் அவரது மகன் முருகபெருமாள் மற்றும் அவரது உறவினர்களான ஐக்கோர்ட் மாரியப்பன் மகன்கள் பாலமுருகன், பாரத், சுடலை மகன் பாலசுப்பிரமணியன், ஆறுமுகநயினார் மகன்கள் மகேந்திரன், மனோ, பாலமுருகன் மகன் மாரிசெல்வன், வீரமணி மகன் பாலமுருகன், ஆறுமுக நயினார் மகன் பண்டாரம் ஆகியோர் சேர்ந்து மாரியப்பனை வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த முறப்பநாடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் விரைந்து சென்று சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் முறப்பநாடு காவல் ஆய்வாளர் . பாஸ்கரன், ராஜாராபர்ட் உட்பட காவல்துறை அதிகாரிகள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் தனிப்படையினர் மேற்கொண்ட தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டதில் கீழபுத்தநேரியைச் சேர்ந்த பண்டாரம் மகன் மூக்கையா (எ) சண்முகநாதன் (54) மற்றும் அவரது மகன் முருகப்பெருமாள் (24) ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்