80.5 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி தமிழ்நாட்டிலே முதன் முறையாக பெண்கள் உதவி சேவை வழிகாட்டுதல் வகுப்பு அரியலூர் எஸ்‌‌‌.பி பெரோஸ்‌‌‌கான்‌‌‌...

தமிழ்நாட்டிலே முதன் முறையாக பெண்கள் உதவி சேவை வழிகாட்டுதல் வகுப்பு அரியலூர் எஸ்‌‌‌.பி பெரோஸ்‌‌‌கான்‌‌‌ தலைமையில் நடைபெற்‌‌றது

அரியலூர் – ஜீன் – 22,2021

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 22.06.2021 இன்று Women Help Desk -க்கு நியமிக்கப்பட்ட பெண் காவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வகுப்பு நடைபெற்றது.

இந்த வழிகாட்டுதல் வகுப்பிற்கு வந்த அனைவரையும் வரவேற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா வரவேற்புரை நிகழ்‌‌‌த்‌‌‌தினார்‌‌‌

தமிழ்நாடு கூடுதல் காவல் துறை இயக்குனர் சீமா அகர்வால் I.P.S ., அவர்கள் காணொளி வாயிலாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
முன்னதாக மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் I.P.S ., தொடக்க விழா உரையும், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ராதிகா I.P.S.,முன்னுரையும் ஆற்றினார்கள். இறுதியாக அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சேகர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.

இந்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்க்க காவல் நிலையங்களிலும் Women Help Desk அமைக்கப்பட்டு ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இரண்டு பெண் காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன,அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 2 அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் 6 காவல் நிலையங்களில் Women Help Desk அமைக்கப்பட்டுள்ளது. இந்த Women Help Desk சேவை 24 மணி நேரமும் செயல்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இலவச சேவை தொடர்பு எண் – 181 வரும் அழைப்புகளுக்கு காவல்துறையினர் அவர்கள் இருப்பிடம் சென்று உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள். பெண்கள் சார்பான பிரச்சினைகள் தொடர்பாக CSR (Community Service Register) அல்லது வழக்கு பதிவு செய்யவும், பிரச்சனைகள் தொடர்புடைய மற்ற துறைகளான சமூகநலத்துறை, மருத்துவ மற்றும் உளவியல் துறை, தொழிலாளர் நலத்துறை, மகளிர் திட்டம் போன்ற துறைகளுடன் இணைந்து அவர்களது பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வினை அளிப்பார்கள்.
மேலும் ஆதரவற்றோருக்கு அடைக்கலம் அளிக்கவும், பொருளாதார வசதி செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்து தரப்படும். பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளுக்கு ஆலோசனை கூறவும், பாதுகாப்பு அளிக்கவும் அரியலூர் பொது மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைப்பாளர் கண்காணிப்பில் One Step centre அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில்
One step centre coordinator மீனாட்சி, மாவட்ட தொழிலாளர் அதிகாரி குருநாதன், மனநல மருத்துவர் அன்பழகி, அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் விஜயலட்சுமி, ஆகியோர் சிறப்பு வகுப்பு எடுத்தனர்‌‌‌

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்