85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் செயல்படுத்தபடும் மாவட்ட எஸ்.பி அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் செயல்படுத்தபடும் மாவட்ட எஸ்.பி அறிவிப்பு

நாமக்கல் – ஜீன் -30,2021

நாமக்கல் மாவட்டத்தில் 13 போலீஸ் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையம் செயல்படுத்தப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார்


பெண்களுக்கான உதவி மையம்

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் ‘பெண்களுக்கான உதவி மையம்’ என்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டத்தினை செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைகளுடன் காவல்துறை கைகோர்த்து உள்ளது. இதன் ஒரு அங்கமாக ‘பெண்களுக்கான உதவி மையம்’ புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது.

அது தொடர்பான ஒரு நாள் பயிற்சி வகுப்பினை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சுஜாதா, ரவிக்குமார், செல்லப்பாண்டியன், குழந்தைகள் நலக்குழு அலுவலர் கோகிலவாணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பேபி பிரிஸ்டில்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….

24 மணி நேரமும்

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உட்பட 13 போலீஸ் நிலையங்களில் இந்த உதவி மையங்கள் செயல்படும். பெண்களுக்கு உதவ ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு பெண் காவலர் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

இந்த உதவி மையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். பாதிக்கப்பட்ட மற்றும் உதவி தேவைப்படும் பெண்கள் இந்த உதவி மையத்தை அணுக 181 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.


19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்