78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தென்காசி காணாமல் போன 5 வயது சிறுமியை 2 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர் - மாவட்‌‌‌ட...

காணாமல் போன 5 வயது சிறுமியை 2 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர் – மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி பாராட்‌‌‌டு

தென்காசி – ஜீன் -12,2021

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுமனை தெருவை சேர்ந்த ஜெசினா என்ற 5 வயது சிறுமி காணாமல் போனதாக அச்சிறுமியின் தாய் தென்காசி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கவே உடனடியாக அங்கு விரைந்த தென்காசி சார்பு ஆய்வாளர் . கற்பகராஜா மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் முத்துராஜ் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பணியில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் தகவல் தெரிவித்ததுடன், அனைத்து சோதனை சாவடிகளிலும் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அப்போது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் மூன்று தெருக்கள் தள்ளி அழுது கொண்டிருந்த சிறுமியை காவல்துறையினர் மீட்டு குழந்தையின் பெற்றோருக்கு தெரிவித்து அறிவுரை வழங்கி குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையின் தாய் காவல்துறைக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார். காவலர்களின் இச்செயலுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS பாராட்டி பரிசளித்தார், இரண்டு மணி நேரத்தில் குழந்தையை மீட்டு தாயுடன் ஒப்படைத்த மேற்கண்ட காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்