79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில் 20,லிட்டர் கள்ள சாரய ஊரல் அழிப்பு- குற்றவாளிகள் தப்பி ஓட்டம் எஸ்.பி நேரில்...

தூத்துக்குடியில் 20,லிட்டர் கள்ள சாரய ஊரல் அழிப்பு- குற்றவாளிகள் தப்பி ஓட்டம் எஸ்.பி நேரில் ஆய்வு

தூத்துக்குடி – ஜீன் – 12 ,2021

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனங்காட்டில் கள்ளச்சாராயம் வடிப்பு – 20 லிட்டர் ஊரல் அழிப்பு – கேஸ் சிலிண்டர், அடுப்பு மற்றும் பானை பறிமுதல் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்ய உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்களிடம் கண்டுபிடித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேற்படி உத்தரவின்பேரில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் ஜூடி, உதவி ஆய்வாளர் திரு. தாமஸ், ஸ்ரீவைகுண்டம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெகநாதன், தலைமைக் காவலர்கள் லட்சுமணன், தனிப்பிரிவு காவலர் திரு. சந்தோஷ் செல்வம், ஆகியோர் ரோந்து சென்றபோது இருவர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர், அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர்.

இத்தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு சமமந்தபட்ட எதிரிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த 20 லிட்டர் ஊரலை அழைத்து, கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர் மற்றும் 2 பானைகளை பறிமுதல் செய்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்