85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியல் பரபரப்பு பயங்கர ஆயுதங்களுடன்‌ ஒருவர் சிக்கினார் - மாவட்ட எஸ்.பி நேரில் சென்று ...

தூத்துக்குடியல் பரபரப்பு பயங்கர ஆயுதங்களுடன்‌ ஒருவர் சிக்கினார் – மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

தூத்துக்குடி – ஜீன் – 21,2021

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 4 மான் கொம்பு, 5 வீச்சு அரிவாள், 4 கத்தி மற்றும் ஷரங்கு எனப்படும் கைப்பிடியுடைய குத்துக்கம்பி போன்ற பயங்கர ஆயுரங்கள் வைத்திருந்தவர் கைது – சாயர்புரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்; எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை.

20-06-2021தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியான சாயர்புரம் போப்ஸ் கல்லூரி முன்பு சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், தலைமைக் காவலர்கள் சங்கர், இன்பராஜ் மற்றும் இளையராஜா ஆகியோர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிவத்தையாபுரம் சாமிகோவில் தெருவைச் சேர்ந்த காளிமுத்து மகன் ஆனந்த சேகர் (38) என்பவரை சோதனை செய்ததில், அவரது பைக்கில் 1 மான் கொம்பு, 1 கத்தி, 1 மற்றும் வீச்சு அரிவாள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவரைக் கைது செய்து, மேற்படி மான் கொம்பு மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் சம்மந்தப்பட்ட ஆனந்த சேகர் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனையிட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்கள் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையில் போலீசார் அவரது வீட்டில் சோதனையிட்டதில், அவரது வீட்டிலிருந்து மேலும் 3 பெரிய வீச்சு அரிவாள், 1 அரிவாள், 3 பெரிய கத்தி, 3 மான் கொம்பு மற்றும் ஷரங்கு எனப்படும் கைப்பிடியுடன் கூடிய பெரிய குத்து கம்பி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சாயர்புரம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று எதிரி ஆனந்த சேகரின் பைக் மற்றும் அவரது வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4 மான் கொம்பு, 3 பெரிய வீச்சு அரிவாள், 2 அரிவாள், 4 பெரிய கத்தி மற்றும் ஷரங்கு எனப்படும் கைப்பிடியுடன் கூடிய பெரிய குத்து கம்பி ஆகியவற்றை பார்வையிட்டு விசாரணை செய்தார். பின் காவல்துறை அதிகாரிகளிடம் எதிரி ஆனந்த சேகருக்கு யார், யாருடன் தொடர்பு உள்ளது, அவர் எதற்காக சட்டவிரோதமாக இதுபோன்ற பயங்கர ஆயுதங்களை வைத்துள்ளார் என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி எதிரியை கைது செய்த சாயர்புரம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ. ஜெயக்குமார் பாராட்டினார் இந்நிகழ்வின்போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா, தனிப்பிரிவு தலைமைக் காவலர் மைக்கேல்ராஜ் பிரதீப் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்