78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி 32 லட்சம் மதிப்புள்ள 264 செல்‌‌‌போன்கள்‌‌‌ மீட்கபட்டுள்ளது - நெல்லை எஸ்.பி தகவல்

32 லட்சம் மதிப்புள்ள 264 செல்‌‌‌போன்கள்‌‌‌ மீட்கபட்டுள்ளது – நெல்லை எஸ்.பி தகவல்

திருநெல்வேலி – ஜீன் – 22,2021

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி, மாவட்ட சைபர் கிரைம் போலீசார், காணாமல் போன 6 லட்சத்தி 88 ஆயிரத்து 460 ரூபாய் மதிப்பிலான 50 செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரித நடவடிக்கை.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்‌‌‌ணன்‌‌‌ IPS உத்தரவுபடி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைசாமி, அவர்கள், தலைமையிலான சைபர்கிரைம் போலீஸார், மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் ராஜதுரை, உதவி ஆய்வாளர் ராஜரத்தினம்‌, உதவி ஆய்வாளர் அச்சுதன் ஆகியோர் அடங்கிய சைபர் கிரைம் காவல்துறையினர் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு ரூபாய் 6 லட்சத்தி 88 ஆயிரத்து 460 மதிப்புள்ள 50 செல்போன்களை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து,செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை, அந்தந்த காவல் நிலைய காவலர்களிடம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்‌‌‌ணன்‌‌‌ IPS ஒப்படைத்தார்‌‌‌

பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் இதுவரை மாவட்ட சைபர்கிரைம் காவல்துறையினர் 32 லட்சத்து 7 ஆயிரத்து 535 மதிப்புள்ள 264 செல்போன்களை மீட்டுள்ளனர். இதுவரை மீட்கப்பட்ட செல்போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று வழங்கப்பட்ட செல்போன்கள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் நலன் கருதி செல்போன்களை காவலர்கள் நேரடியாக அவர்கள் வீட்டுக்கே சென்று உரியவர்களிடம் வழங்குவார்கள் என தெரிவித்தார்.பின் செல்போன்களை மீட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்து தெரிவித்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் செல்போன்களை பலர் பல்வேறு வழிகளில் தொலைத்திருக்கலாம். வங்கி விபரங்கள் போன்ற உங்களுடைய தனிப்பட்ட விபரங்களையும், புகைப்படங்களையும் செல்போனில் வைக்காதீர்கள். கவனமில்லாமல் உங்கள் செல்போன் தொலைத்து விட்டால், அது ஒரு வேளை சமூக விரோதிகள் கையில் கிடைத்து விட்டால் அதை அவர்கள் பல்வேறு சட்ட விரோதமான காரியங்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்று அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட சைபர் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராஜதுரை, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ், சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் ராஜரத்தினம், உதவி ஆய்வாளர் அச்சுதன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்