100 F
Tirunelveli
Thursday, September 16, 2021
முகப்பு மாவட்டம் சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் தலைமையில் போலீசாருக்கு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது

போக்குவரத்து கூடுதல் கமிஷனர் தலைமையில் போலீசாருக்கு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது

சென்னை – ஜீன் – 09,2021

நமதுநிருபர் – ஹெச்.எம்.ரிஸ்வான்

பணியில் உள்ள காவலர்‌‌‌களின்‌‌‌ உடல் நலன் காக்கும் மருத்துவகுழுக்கள் அமைக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவு. போக்குவரத்து கூடுதல் கமிஷனர்‌‌‌ முகாமை துவக்கி வைத்து, கொரோனா தடுப்பு தொகுப்பினை காவலர்களுக்கு வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு அமலில் உள்ளதால், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில், தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறுவோர், இ-பதிவு சான்றுகள் இல்லாமல் வாகனங்களில் செல்பவர்கள், முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்கள் ஆகியோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், முறையான ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்தவும் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் சென்னையின் முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பல்வேறு இடங்களில் தற்காலிக வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனத் தணிக்கைகள் செய்து, கொரோனா வழிகாட்டுதல் எடுத்து வருகின்றனர்.
கொரனோ நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு சார்ந்த அமலாக்க பணியில் காவல் துறையினர் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளில் அர்ப்பணிப்புடன் பணிசெய்து வருவதால் பணி செய்யும் காவலர்களுக்கு அடிக்கடி ஏற்படும் சோர்வு மற்றும் உடல்நலம் கண்காணித்திட வேண்டி, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்திட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப. உத்தரவிட்டார். அதன்பேரில், சென்னை பெருநகரின் அனைத்து காவல் நிலைய சரகங்களில் உள்ள காவலர் முதல் அதிகாரிகள் வரை அன்றாடம் முன்களப்பணியில் இருந்து வரும் காவல்துறையினருக்கு மருத்துவ வசதிகள், மருத்துவ பரிசோதனைகள் செய்து அவர்களுடைய உடல் நலம் பேணி பாதுகாக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.
இன்று (09.06.2021) காலை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர்.பிரதீப் குமார் இ.கா.ப அமைந்தகரை, அண்ணா வளைவு அருகே காவல்துறையினரின் வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு, போக்குவரத்து காவலர்களுக்கான நடமாடும் மருத்துவ பரிசோதனை முகாமினை துவக்கி வைத்து, ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு தொகுப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், எஸ்.கணேஷ், இ.ஆ.ப., இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம், அண்ணா மருத்துவமனை, போக்குவரத்து இணை ஆணையாளர் (வடக்கு) ஆர்.லலிதா லஷ்மி,இ.கா.ப, போக்குவரத்து துணை ஆணையாளர் (மேற்கு) அசோக்குமார், காவல் அதிகாரிகள், ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்து பழனியப்பன், மருத்துவ குழுவினர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
47FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நேர்மிகு மனிதருக்கு சேலம் போலீஸ் கமிஷனர் பாராட்டு

0
சேலம் - செப் -16,2021 இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று தவறவிட்ட 1,00,000/-ஐ காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்தவர்களை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் வரவழைத்து கௌரவித்தார். 14.09.2021 ஆம் தேதி சேலம்...

“தூத்துக்குடி எஸ்.பியின் அதிரடி நடவடிக்கையால் 36,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள நிலம் மீட்பு….

0
தூத்துக்குடி - செப் -15,2021 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் மோசடி செய்த ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலம் மீட்பு - மாவட்ட...

தூத்துக்குடியில் தடகள போட்டியை மாவட்ட எஸ்.பி ஒழிப்பிக் ஜோதியை ஏற்றி துவக்கிவைத்தார்

0
தூத்துக்குடி - செப் - 15,2021 தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக இளையோர்களுக்கான தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தேசியக் கொடி ஏற்றி...

இனையதள மோசடி குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை கோவை எஸ்.பி வெளியிட்டார்

0
கோயம்புத்தூர் -செப்‌‌‌,14,2021 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செல்வநாகரத்தினம் இ.கா.ப.,  உத்தரவின்பேரிலும்,சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் சங்கு  வழிகாட்டுதலின் படியும், சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் . ஜெயதேவி  மற்றும் சைபர் கிரைம்...

பெண்கள்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ மாற்‌‌‌றுதிறனாளிகளுக்‌‌‌கு உதவ மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி விடியல்‌‌‌ என்‌‌‌கிற புதிய திட்‌‌‌டத்‌‌‌தை துவக்‌‌‌கினார்‌‌‌

0
கோயம்புத்தூர் - செப் - 14,2021 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ...

தற்போதைய செய்திகள்