85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி பெண்கள் உதவி மையம் திட்டத்தை திருச்சி சரக டி.ஐ.ஜி தொடங்‌‌‌கிவைத்தார்

பெண்கள் உதவி மையம் திட்டத்தை திருச்சி சரக டி.ஐ.ஜி தொடங்‌‌‌கிவைத்தார்

திருச்சி – ஜீன் – 27,2021

நமதுநிருபர் – எஸ்.எம்.பாரூக்

பிரச்சனைகளுடன் வரக்கூடிய பெண்களுக்கு உதவிடுவதே மையத்தின் நோக்கம் என்ற அடிப்படையில் பெண்கள் உதவி மையம் என்ற திட்டத்தை தொடங்கிவைத்த திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்

இந்திய அரசின் நிர்பயா சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்க்க திருச்சி மத்திய மண்டலத்தில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட்டது.

அதனடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் இன்று திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் ராதிகா இ.கா.ப மேற்பார்வையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.மூர்த்தி இ.கா.ப தலைமையில் பெண்கள் உதவி மையம் என்ற திட்டத்தை 15 காவல் நிலையங்களில் அமைக்கப்பட்டு ஒவ்வொரு உதவி மையத்திற்கும் 2 பெண் காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இலவச சேவை தொடர்பு எண் 181 – க்கு வரும் அழைப்புகளுக்கு உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் வகையில் தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் இத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட பெண் காவலரிடம் உதவி என்று கேட்டு வரக்கூடிய ஒவ்வொரு அழைப்பையும் உங்களுடைய பிரச்சனையாக கருதினால் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான 100 வகையான வழிகள் உங்களுக்கு கிடைக்கும் என்றும்
மேலும் பிரச்சனையோடு வரக்கூடிய பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உளவியல் ரீதியாக அவர்களோடு கலந்துரையாடி அவர்களுடைய பிரச்சினைகளை முழுமையாக புரிந்துகொண்டு அவற்றுக்கு முழுமையான தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம் என்று பெண் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

24 மணி நேரமும் பெண்கள் உதவி சேவையானது செயல்படும் என்பதால் இந்த உதவி மையத்தில் பணியில் இருக்கும் பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் லேப்டாப் போன்றவற்றை திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் ராதிகா இ.கா.ப வழங்கினார்

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்