80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி இலங்கைக்கு கடத்த முயன்ற 3 லட்சம் மதிபுள்ள 2500 கிலோ விரல் மஞ்சல் பறிமுதல் -...

இலங்கைக்கு கடத்த முயன்ற 3 லட்சம் மதிபுள்ள 2500 கிலோ விரல் மஞ்சல் பறிமுதல் – 5பேர் கைது

தூத்துக்குடி – ஜீன் -26,2021

தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரையிலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 2500 கிலோ எடையுள்ள விரல் மஞ்சள் பறிமுதல் – 5 பேர் கைது – தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெர்மல் (பீச்) கடற்கரை வழியாக இலங்கைக்கு விரல் மஞ்சள் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் கணேஷ் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர் ஆசைத்தம்பி, தனிப்பிரிவு தலைமைக் காவலர் கந்தசுப்பிரமணியன், தலைமை காவலர் பென்சிங், முதல் நிலை காவலர் செந்தில்குமார், முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜ், மகாலிங்கம், சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி மற்றும் முத்தமிழ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று அதிகாலை தெர்மல்நகர் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது 2500 கிலோ எடையுள்ள விரல் மஞ்சள்கள் ஒரு வேனிலிருந்து படகில் ஏற்றி இலங்கைக்கு கடத்துவதற்கு தயாராக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே மேற்படி தனிப்படையினர் கடத்த இருந்த 2500 கிலோ விரல் மஞ்சள், படகு மற்றும் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2500 கிலோ விரல் மஞ்சளின் இந்திய மதிப்பு ரூபாய் 3 லட்சமாகும். ஆனால் இவற்றின் இலங்கை மதிப்பு ருபாய் 16 லட்சம் வரையிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிலுவைப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் கோவிந்த பெருமாள் (36), சுனாமி காலணி ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் சேர்மராஜா (19), கீழ வைப்பாரைச் சேர்ந்த அருள் மகன் ராபின்ஸ்டன் (23), அதே பகுதியைச் சேர்ந்த செல்லையா மகன் அருள் (55), ஜேசு மகன் விதுஸ்டன் (20) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

மேற்படி கடத்தல் சம்பவம் தெர்மல் நகர் மெரைன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் பறிமுதல் செய்த 2500 கிலோ விரல் மஞ்சள், படகு மற்றும் வேன் ஆகியவற்றையும், கைது செய்த 5 பேரையும் மெரைன் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மெரைன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த 2500 கிலோ விரல் மஞ்சள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய படகு, வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்ட எதிரிகளையும் கைது செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்