80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி காவல் வாகணங்கள் மற்றும் பேரிடர் கால மீட்பு உபகரனங்களை மாவட்ட எஸ்.பி இன்று ஆய்வு

காவல் வாகணங்கள் மற்றும் பேரிடர் கால மீட்பு உபகரனங்களை மாவட்ட எஸ்.பி இன்று ஆய்வு

தூத்துக்குடி – ஜீன் -26,2021

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் வாகனங்களை மாவட்ட காவல்துறை வளாக மைதானத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆய்வு.

இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில், தூத்துக்குடி நகரம் மற்றும் ஊரக காவல்துறையின் கனரக வாகனங்கள் 15, நான்கு சக்கர வாகனங்கள் 43 மற்றும் இரு சக்கர வாகனங்கள் 81 மொத்தம் 139 வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை வாகனங்களை பயன்படுத்தும் ஓட்டுனர்களிடம் வாகனங்கள் மற்றும் அவர்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்தார். குறைபாடு உள்ள வாகனங்களை உடனே சீர் செய்யுமாறும், காவல்துறையினரின் குறைபாடுகளை சரி செய்யுமாறு மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான் அவர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும், சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். எவ்வித விபத்தும் ஏற்படா வண்ணம் வாகனம் ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இந்த வாகன ஆய்வின் போது ஆயுதப்பபடை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கண்ணபிரான், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை (பொறுப்பு) போக்குவரத்து காவல் ஆய்வாளர் . மயிலேறும் பெருமாள், ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு உதவி ஆய்வாளர் செல்வக்குமார், தலைமைக் காவலர் ராமச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்