85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டு

தூத்துக்குடி – ஜீன் – 21,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் கடந்த 17.06.2021 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்ற பின்னணி உள்ள 3 போக்கிரிகள் மற்றும் ஒரு எதிரியை கைது செய்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்கள் சாமுவேல், மகாலிங்கம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக சங்கர் என்பவரை கொலை செய்ய முயன்ற எதிரிகள் மூவரை சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் கைது செய்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், உதவி ஆய்வாளர்கள் முத்து கணேஷ், சிவக்குமார், தலைமை காவலர் பென்சிங், காவலர்கள் செந்தில், திருமணி, முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துப்பாண்டி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 15.06.2021 அன்று குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடு போன இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து எதிரியை கைது செய்து, வாகனத்தையும் கைப்பற்றிய குலசேகரப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையற்கரசி, உதவி ஆய்வாளர் ராஜன் ஆகியோர் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கயத்தாறு ஆற்றங்கரை சுடலை கோவில் அருகில் வைத்து மூன்று எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான 1½ கிலோ கஞ்சாவை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தும், கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 2 எதிரிகளை கைது செய்து, அவர்களிடம் இருந்து தங்க நகை, மற்றும் பணம் ரூபாய் 60,600/-யை கைப்பற்றிய கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிவண்ணன், உதவி ஆய்வாளர்கள் அரிகண்ணன், பால், தலைமை காவலர் செல்வம், காவலர்கள் சத்ரியன், பால கிருஷ்ணன், ஆனந்த், கோபால கண்ணன் குருமூர்த்தி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 19.06.2021 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று எதிரிகளை கைது செய்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் மற்றும் டிப்பர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இம்மானுவேல் ஜெயசேகர், தட்டாபாறை காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் விக்னேஷ், முதல்நிலைக் காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தட்டப்பாறை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளம்சிறார்கள் இருவரை கைது செய்தும், களவுபோன மோட்டார், வயர் மற்றும் பைப் ஆகிய சொத்துக்களை கைப்பற்றி நடவடிக்கை எடுத்த தட்டப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியன் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

கடந்த 20.06.2021 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடல்மார்க்கமாக கடத்தவிருந்த சுமார் 2450 கிலோ எடையுள்ள மஞ்சள் மூடைகள், லாரி, இருசக்கர வாகனங்கள் மற்றும் படகின் இன்ஜின் ஆகியவற்றை கைப்பற்றிய ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அமலோற்பவம், தலைமை காவலர்கள் வெள்ளாரி புருஷோ சேவியர், ராஜா, ரகு, முதல் நிலை காவலர் லட்சுமண பெருமாள், பாலமுருகன், மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12 அணி காவலர் ராஜ விக்னேஷ் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆடுகள் திருடிய எதிரிகள் மூவரை கைது செய்தும், அவர்கள் திருடிச் சென்ற 8 ஆடுகளை கைப்பற்றி சாயர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அருள் சாம்ராஜ், முதல் நிலை காவலர் சீனிவாசன், காவலர் கணேசன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 15.06.2021 அன்று கோவில்பட்டி மூக்கரை பிள்ளையார் கோவில் அருகில் உள்ள மதுபான கூடத்திலிருந்து 270 மது பாட்டில்களை கைப்பற்றி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா, தலைமை காவலர் அர்ஜுன்ராஜ், முதல் நிலை காவலர் முருகன், தனிப்பிரிவு காவலர் அருண் விக்னேஷ் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்