78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் திருவாரூர் பழங்குடி மக்களின் பசியை போக்கும் விதமாக உணவு பொருட்களை மாவட்ட எஸ்.பி வழங்கினார்

பழங்குடி மக்களின் பசியை போக்கும் விதமாக உணவு பொருட்களை மாவட்ட எஸ்.பி வழங்கினார்

திருவாரூர் – ஜீன் -15,2021

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் அபிஷேகக்கட்டளை பகுதியில் ‘ஆதியன்’ பழங்குடியினரான ‘பூம்பூம் மாட்டுக்காரர்கள்’
சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

ஆதியன் பழங்குடி இனத்தை சார்ந்த பூம்பூம் மாட்டுக் காரர்கள் பாரம்பரியமாக அலங்கரிக்கப்பட்ட பூம்பூம் மாட்டை கொண்டு ஊர் ஊராக சுற்றி மக்களிடம் குறிசொல்லி, வேடிக்கை காட்டி யாசகம் பெற்று வாழ்பவர்கள்

இவர்களில், ஆண்களின் முக்கிய தொழில் மாடுகளை பழக்கி வித்தை காட்டுவது. பெண்கள் ஊசிமணி, வளையல், தோடு, திருஷ்டிகயிறு போன்ற பொருட்களை ஊர் ஊராக சென்று கோவில் திருவிழாக்கள், சந்தைகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் விற்று பிழைப்பு நடத்துவது ஆகும்.

தற்பொழுது கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில். இவர்களுக்கு பிழைப்பு இல்லாமல் சாப்பாட்டுக்கு வழி தெரியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்பொழுது மாடுகளை வைத்து பராமரிக்க முடியாததால் பூம்பூம் மாட்டுக்காரர்கள், மாடுகள் இல்லாமல் வீடு வீடாக சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வரும் நிலையில் உள்ளனர்.

குறிப்பாக இதில் வயதானவர்கள்,
கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள்
பாதிக்கப்பட்டு பசிக்கொடுமை இருந்து வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஸ்ரீனிவாசன் இன்று
மேற்படி மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து அங்கு வசிக்கும் மக்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் பசியின்றி
வாழ தேவையான அரிசி,
மளிகைபொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை வழங்கி
அனைவரையும் உற்சாகப்படுத்தி
உரையாற்றினார்

மேலும் ஊரடங்கு தொடரும்பட்சத்தில்
அவர்களுக்கு இதேபோன்று அனைத்து உதவியையும் தொடர்ந்து செய்வதாகவும்,
மேலும் அவர்களது அனைத்து கோரிக்கைகளையும்
சம்மந்தப்பட்ட துறையினர் மூலம்
நிறைவேற்ற
உதவி செய்வதாக தெரிவித்துள்ளார்

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்