79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் ஈரோடு ஈரோடு எஸ்.பியின் சசிமோகன் அதிரடி நடவடிக்கை

ஈரோடு எஸ்.பியின் சசிமோகன் அதிரடி நடவடிக்கை

ஈரோடு -ஜீன் – 21,2021

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில், லாட்டரி மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்த 202 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.

202 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கடந்த

7-ந்தேதி முதல் 17-ந்தேதி

வரையிலான 10 நாட்களில் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில், சட்டவிரோத லாட்டரி விற்பனை, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டோர் மீது 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள் 25, கஞ்சா 21½ கிலோ, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 1½ டன், 8 சேவல்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 880(1,80,000) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும்,
கடம்பூர் காவல் நிலைய சரகம் நகலூர் கிராமம் சுமார் 135 குடும்பங்களுக்கு, கொரானோ விழிப்புணர்வு , தடுப்பூசி விபரம் , பெண் கல்வி , குழந்தை திருமணம் தடுத்தல் ஆகிய கருத்துக்கள் கூறியும், பேருரையாற்றியும் கொரானோ” நிவாரணப் பொருட்களை வழங்கியும் உள்ளார்கள்.

கடும் நடவடிக்கை

மேலும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த வாகனங்கள் அரசுடமை ஆக்கப்பட உள்ளன..,

சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள், போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீதும், மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி 96552 20100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும்,ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்துள்ளார்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்