78.2 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டத்திற்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தை திருநெல்வேலி மாவட்ட எஸ்‌‌‌.பி இன்‌‌‌று செய்‌‌‌தார்‌‌‌

திருநெல்வேலி மாவட்டத்திற்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தை திருநெல்வேலி மாவட்ட எஸ்‌‌‌.பி இன்‌‌‌று செய்‌‌‌தார்‌‌‌

திருநெல்வேலி – மே -03 ,2021

திருநெல்வேலி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக அரசால் மாவட்ட காவல் துறைக்கு புதிதாக இரண்டு நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் (Bolero) வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக வழங்கப்பட்ட ரோந்து வாகனங்களை திருநெல்வேலி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு நெ.மணிவண்‌‌‌ணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் நெடுஞ்சாலைகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும், விபத்துகளை தடுக்கவும், புதிதாக நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரோந்து வாகனங்கள் தாழையூத்து உட்கோட்ட பகுதியில்‌ உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் -1 எனவும் மற்றுமொரு வாகனம் நாங்குநேரி உட்கோட்ட பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம்-2 எனவும் அழைக்கப்பட்டு, காவலர்கள் பணியமர்த்தப்பட்டு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் மரிய கிளாட்ஸன் ஜோஸ், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வாகன பிரிவு உதவி ஆய்வாளர் கணபதி மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்