96.7 F
Tirunelveli
Saturday, June 19, 2021
முகப்பு மாவட்டம் சென்னை சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல் கைது...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல் கைது – சைபர் க்ரைம் போலீசார் அசத்தல்

செனனை – மே – 14 ,2021

நமதுநிருபர் – ஹெச்.எம்.ரிஸ்வான்

சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌ கமிஷனர் சங்‌‌‌கர்‌‌‌ ஜிவால்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌

தலைமையில் 12 மாவட்டங்களில் துணை கமிஷனர்‌‌‌களின்‌‌‌ நேரடி கண்காணிப்பில் சைபர் கிரைம் பிரிவு செயல்பட்டு வருகிறது. சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர்‌‌‌ கண்ணன் மற்றும் இணை கமிஷனர்‌‌‌ பாலகிருஷ்ணன் ஆகியோரின் ஆலோசனைகளின் படி, அடையாறு மாவட்ட துணை கமிஷனர் விக்ரமனின்‌‌‌ நேரடி கட்டுப்பாட்டில் பயிற்சி பெற்ற உதவி ஆய்வாளர் ஜெய பாலாஜி, முதல் நிலைக் காவலர்கள் சதீஷ்குமார் மற்றும் இந்திராணி ஆகியோர் கொண்ட சைபர் கிரைம் பிரிவு இயங்கி வருகிறது.அடையாறு சைபர் கிரைம் பிரிவினர் மூலம் சைபர் மோசடியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவர்களின் இழந்த பணம் மீட்டுத் தரப்பட்டு வருவதோடு கடந்த 10 மாதங்களில் 5 போலி கால் சென்டர்கள் முடக்கப்பட்டு மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தரமணியில் பேபி நகரில் ஆண்கள் விடுதி வைத்து நடத்தி வந்தவர் முரளி கிருஷ்ணா வயது 35 இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தன்னுடைய வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த விடுதியை விரிவுபடுத்த கடன் வேண்டி வங்கிகளை அணுகியுள்ளார்.
இந்நிலையில்‌‌‌ டாடா பைனான்‌‌‌ஸ்‌‌‌ என்ற நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி தொடர்புகொண்டு அடமானம் இன்றி கடன் தருவதாகக் கூறியுள்ளனர். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக தன்னுடைய முன் தொகையை டெபாசிட் செய்யுமாறு கூறி உள்ளனர். அதை நம்பிய இவரும், நாலு லட்சம் ரூபாய் கடன் தேவைப்படுவதாகக் கூறி அதற்கு முன்பணமாக 20 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி உள்ளார்.மேலும் இன்சூரன்ஸ் மற்றும் இதர காரணங்களை கூறியதன் அடிப்படையில் அவ்வப்போது சிறுக சிறுக 25 லட்சம் ரூபாய் வரை பணத்தை செலுத்தி உள்ளார்.தொடர்ந்துதான் ஏமாற்றப்பட்டு வருவதை அறிந்த முரளிகிருஷ்ணா கடந்த 20/04/ 2021 ஆம் தேதி அடையாறு மாவட்ட துணை ஆணையாளர் விக்ரமன் அவரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.புகாரினை பரிசீலனை செய்ததில் ஆன்லைன் மோசடி என தெரியவர அடையாறு சைபர் கிரைம் பிரிவினரை முடுக்கிவிட்டார்.
விசாரணையில் திருச்சி தில்லைநகரில் போலி கால் சென்டர் இயங்கி வந்ததும் அதன் மூளையாக செயல்பட்டு வந்த அமர்நாத் வயது 30 சஞ்சய் வயது 27 மற்றும் செய்யது அப்துல்லா வயது 27 ஆகிய மூவரையும் கைது செய்தனர்.இவர்கள் மூவரையும் விசாரணை செய்ததில் மூவரும் நிதி நிறுவனம் போன்றே போலியான ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டைகளை தயார் செய்தும் மேலும் அடமானங்கள் இன்றி லோன் தருவதாக கூறி அவர்களிடமிருந்து பணம் பெற்று மோசடி செய்து வந்தது தெரியவந்தது. அதனையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த அடையாறு துணை ஆணையாளர் அவரின் தனிப்படையினரான காவல் ஆய்வாளர் மோகன் தாஸ்,உதவி ஆய்வாளர் ஜெய பாலாஜி,தலைமைக் காவலர்கள் ஜானி விஜய், முகிலன், கிரி, சதீஷ்குமார் மற்றும் முதல் நிலை காவலர் லோகநாதன் ஆகியோர் அவர்களை கைது செய்து,தரமணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வரும் தனிப்படையினர் விசாரணை முடிந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் இவர்களிடமிருந்த மோசடிக்கு பயன்படுத்திய மடிக்கணினிகள், செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள் மற்றும் மோசடி பணத்தில் வாங்கப்பட்ட இரண்டு கார்கள், தங்க நகைகள் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் இவர்கள் 13/ 12 /2019 ஆம் தேதி திருவள்ளுவர் காவல் நிலையத்தில் ஏற்கனவே மோசடி வழக்கில் அமர்நாத் வ/30, சஞ்சை வ /27, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு இருப்பதும், ஒரு மாதத்திற்கு பின் பிணையில் வந்த பின், ஆன்லைன் மூலம் கடன் வேண்டி விண்ணப்பிக்கும் நபர்களிடம் மோசடி செயல்களில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்தது. இரண்டு வருடங்களாக திருச்சியில் செயல்பட்டு வந்த போலி கால் சென்டரை
முடக்கியதோடு சம்பந்தப்பட்ட மூன்று நபர்களையும் கைது செய்த அடையாறு சைபர் கிரைம் பிரிவினர் மற்றும் அடையாறு துணை கமிஷனர்‌‌‌ தனிப்படையினரை பெருநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
தற்போது கொரோனா ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி பலர் ஆன்-லைன் மூலம் கடன் தருவதாகவும்,
வேலை வாங்கித் தருதல் மற்றும் திருமண தகவல் மையம் மற்றும் இன்னும் பிற காரணங்களை கூறி மோசடியில் ஈடுபடுவதாகவும் எனவே பொதுமக்கள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளில் பாதுகாப்புடன் இருக்குமாறும் சந்தேகம் இருப்பின் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நேரடியாக அணுகி உறுதி செய்து கொள்ளுமாறும்,
மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் அடையாறு துணை கமிஷனர்‌‌‌ விக்கிரமன் கேட்டுக்
கொண்டுள்ளார்.

19,724FansLike
34FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறுவர்கள் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மாவட்ட எஸ்‌‌‌.பி …..

0
கன்னியாகுமரி - ஜீன் - 19,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை. இந் நிலையில் இதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கணவனை இழந்துஆதரவற்று வசித்துவரும்பெண்களுக்கு மத்‌‌‌திய மண்‌‌‌டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும்பணம் வழங்கபட்‌‌‌டது

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்‌‌‌டம்‌‌‌ அழகிரி காலனி பகுதியில்கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் ஜெகதாம்பாள் 70 க/பெ சுந்தரம்ஆந்தாஸ் 68 க/பெ ஞானப்பிரகாசம்ஆகியோரைதிருச்சி மத்திய மண்டல காவல்துறை...

உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய லாரி ஓட்‌‌‌டுநருக்‌‌‌கு மத்‌‌‌திய மண்‌‌‌டல .ஐ.ஜி வெகுமதி...

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகம் வடுவூர் பகுதியில்கடந்த 12.06.21 அன்றுநள்ளிரவு ரோந்து பணியிலிருந்த இருசக்கரவாகன ரோந்து காவலர் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிய நிலையில்சாலையில்கிடந்தபோது அக்காவலரை...

போலீசாரின் நலன் கருதி சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

0
திருவாரூர் - ஜீன் -18,2021 திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைகாவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு குடிநீர் தளம்-திறப்புவிழாதிருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்344காவல் ஆளினர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள311 காவலர் குடியிருப்புகளில் காவலர் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில்அவர்களுக்கு...

போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தர்மபுரி - ஜீன் - 18,2021 சிறப்புகல்வி உதவித்தொகை இரண்டாவது தவணையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 25ஆயிரம் ரூபாய் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக...

தற்போதைய செய்திகள்