திருநெல்வேலி – மே – 05 ,2021
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை மிக அதிகமாக பரவி வருவதை தடுப்பதற்காக தமிழக அரசு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் நாளை 06.05.2021 முதல் அதிக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஐ.பி.எஸ் நாளை 06.05.2021 அன்று திருநெல்வேலி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிய ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் எனவும், அத்தியாவசிய தேவைகளான பால் விற்பனை கடைகள் மற்றும் மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் நண்பகல் 12:00 மணிக்கு மேல் செயல்படக் கூடாது எனவும், மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாதுகாப்பு நடவடிக்கையில்,1500 போலீசார் நாளை ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவித்தார். பொதுமக்கள் தங்கள் நலன் கருதி விதிமுறைகளை பின்பற்றவும் பாதுகாப்பாக இருக்கும்படியும், காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.