86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தமிழ்நாடு வணிகர் பேரவை சார்பில் நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி பங்கேற்பு

தமிழ்நாடு வணிகர் பேரவை சார்பில் நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி பங்கேற்பு

தூத்துக்குடி – மே – 05, 2021

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் 38வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் வியாபாரிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி கபசுரகுடிநீர் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் 3ம் மைல் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் 38வது ஆண்டு விழா முன்னிட்டு இன்று (05.05.2021) தூத்துக்குடி 3ம் மைல் சுற்று வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு முகாம் 3ம் மைல் மெயின்ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி புதிய கட்டுபாடுகள் நாளை (06.05.2021) அதிகாலை 4 மணி முதல் 20.05.2021 அன்று அதிகாலை 4 மணி வரை அமல்படுத்தபட உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் தொடர்ந்து அமலில் இருக்கும். மேலும் பலசரக்கு, மளிகை மற்றும் காய்கறிகடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பலசரக்கு, மளிகை மற்றும் காய்கறிகடைகள் திங்கள் முதல் சனி வரை மதியம் 12 மணி வரை மட்டும் குளிர்சாதன வசதியின்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமுதாய அரசியல், கல்வி, கலாச்சாரம் பொழுதுபோக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால், மருத்துவ சேவைகள் போன்றவற்றிற்கு எந்த தடையும் இல்லை. ஹோட்டல்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. தேநீர் கடைகள் திங்கள் முதல் சனி வரை மட்டும் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும், அதுவும் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கபடும். ஹோட்டல்களில் பார்சல் சேவைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் அனுமதி உண்டு. இறைச்சி மற்றும் மீன் கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு. தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை அமல்படுத்த நாளை முதல் மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், கொரோனா வைரஸ் 2ம் அலை தீவிரமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு விதித்துள்ள கட்டுபாடுகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசத்தை உரிய முறையில் மூக்கு, வாய் ஆகியவற்றை முற்றிலுமாக மறைத்து முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும், மேலும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டு கொள்வதன் மூலம் நம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்புரைறயாற்றினார். பின் அனைவருக்கும் கபசுரகுடிநீர் வழங்கினார்.

இந்த விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை 3ம் மைல் சுற்றுவட்டார வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபாலன், துணை தலைவர் பெத்துபாண்டியன், செயலாளர்கள் செல்லத்துரை, மோகன்ராம், பொருளாளர் பொன்னம்பலம் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்சுரேஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ், தென்பாகம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் மாரிக்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்