81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டத்தில் பணியின்போது உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்த காவலர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய மாவட்ட...

திருநெல்வேலி மாவட்டத்தில் பணியின்போது உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்த காவலர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய மாவட்ட எஸ்‌‌‌.பி

திருநெல்வேலி – மே – 03 ,2021

உவரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் தெய்வதிரு ஆறுமுகம் அவர்கள் 01.05.2021 அன்று உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். மேலும் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வதிரு முகமது ஆரிஃப் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 02.05.2021 அன்று மரணம் அடைந்தார்.
அவர்களுக்கு இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டபோலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு நெ.மணிவண்‌‌‌ணன்‌‌‌ இ.கா.ப., தலைமையில் காவல்துறையினர் அனைவரும் அவர்களது திரு உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் தலைமை காவலர் ஆறுமுகம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் முகமது ஆரிஃப் அவர்களின் இழப்பு, அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் காவல்துறைக்கும் ஒரு ஈடுகட்ட முடியாத பேரிழப்பாகும். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்பாக ஆழ்ந்த இரங்கலை சமர்பிக்கிறோம் என்று கூறினார்.

இந்த அஞ்சலியில் திருநெல்வேலி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் சுப்பாராஜு,தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் மரிய கிளாஸ்டன் ஜோஸ், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்