96.7 F
Tirunelveli
Saturday, June 19, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி – மே – 14 ,2021

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது – கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு ஜெயக்‌‌‌குமார்‌‌‌ பாராட்டு.

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர் கோவில்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு தங்கராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மாதவராஜா, சிவராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி, தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் ஸ்ரீராம் மற்றும் உலகநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினர் நேற்று (13.05.2021) தீவிர ரோந்து மேற்கொண்டதில் கோவில்பட்டி மேட்டு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் மருந்தக உரிமையாளர்களான கோவில்பட்டி காந்தி நகர், நேரு நகரைச் சேரந்த ஆறுமுகநயினார் மகன்களான சண்முகம் (27) மற்றும் அவரது சகோதரர் கணேசன் (29) ஆகியோர் சட்டவிரோதமாக ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பதற்காக மேற்படி மருந்தகத்தில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தனிப்படையினர் சண்முகம் மற்றும் கணேசனிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் ரெம்டெசிவர் மருந்தை திருநெல்வேலி மற்றும் மதுரையிலிருந்து கள்ளச்சந்தையில் வாங்கி அதை சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டத்திற்கு அதிக லாபத்திற்காக சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் ஒரு ரெம்டெசிவர் குப்பி ரூபாய் 20,000/-ற்கு மேல் விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி தனிப்படையினர் சண்முகம் மற்றும் கணேசனை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் 2,20,800/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் குப்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி எதிரிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து 46 குப்பி ரெம்டெசிவிர் மருந்தை கைப்பற்றிய தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌ .ஜெயக்‌‌‌குமார்‌‌‌ பாராட்டினார்.

19,724FansLike
34FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறுவர்கள் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மாவட்ட எஸ்‌‌‌.பி …..

0
கன்னியாகுமரி - ஜீன் - 19,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை. இந் நிலையில் இதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கணவனை இழந்துஆதரவற்று வசித்துவரும்பெண்களுக்கு மத்‌‌‌திய மண்‌‌‌டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும்பணம் வழங்கபட்‌‌‌டது

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்‌‌‌டம்‌‌‌ அழகிரி காலனி பகுதியில்கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் ஜெகதாம்பாள் 70 க/பெ சுந்தரம்ஆந்தாஸ் 68 க/பெ ஞானப்பிரகாசம்ஆகியோரைதிருச்சி மத்திய மண்டல காவல்துறை...

உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய லாரி ஓட்‌‌‌டுநருக்‌‌‌கு மத்‌‌‌திய மண்‌‌‌டல .ஐ.ஜி வெகுமதி...

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகம் வடுவூர் பகுதியில்கடந்த 12.06.21 அன்றுநள்ளிரவு ரோந்து பணியிலிருந்த இருசக்கரவாகன ரோந்து காவலர் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிய நிலையில்சாலையில்கிடந்தபோது அக்காவலரை...

போலீசாரின் நலன் கருதி சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

0
திருவாரூர் - ஜீன் -18,2021 திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைகாவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு குடிநீர் தளம்-திறப்புவிழாதிருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்344காவல் ஆளினர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள311 காவலர் குடியிருப்புகளில் காவலர் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில்அவர்களுக்கு...

போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தர்மபுரி - ஜீன் - 18,2021 சிறப்புகல்வி உதவித்தொகை இரண்டாவது தவணையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 25ஆயிரம் ரூபாய் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக...

தற்போதைய செய்திகள்