96.7 F
Tirunelveli
Saturday, June 19, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி ஏற்பாடு

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி ஏற்பாடு

தூத்துக்குடி – மே – 15 ,2021

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ “டிரோன் கேமரா” மூலம் கண்காணிப்பு.

தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதையடுத்து மாவட்‌‌‌ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு இன்று திருச்செந்தூர் கோவில் மற்றும் கடற்கரைப் பகுதிகள் மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் உள்ள ஆர்ச் பகுதியில் “டிரோன் கேமரா” மூலம் பொதுமக்களின் நடமாட்டம், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன போக்குவரத்துகள் குறித்து பார்வையிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், கொரோனா வைரஸ் 2ம் அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு கடந்த 10.05.2021 முதல் 24.05.2021 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இன்று முதல் ஊரடங்கில் புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதன்படி இன்றிலிருந்து மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோன வைரஸ் பரவலை தடுப்பதற்கு மிக முக்கியமானதான முகக்கவசம் அணியவும் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்கவும் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, இதுவரை சுமார் 40,000 வழக்குகள் போட்டு 80 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளோம். இது தவிர சமூக இடைவெளி மற்றும் கடைகள் திறந்த வைப்பதென சுமார் 400 வழக்குகள் போடப்பட்டுள்ளது. எங்களுக்கு வழக்குகள் முக்கியமில்லை, முகக்கவசம் அணிய வைத்தும், சமூக இடைவெளி கடைபிடிக்க வைத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதுதான் எங்களுடைய முக்கிய நோக்கமாகும். இப்போது பொதுமக்களும் புரிந்து கொண்டு முகக் கவசம் அணிய ஆரம்பித்துவிட்டார்கள். பொதுமக்கள் மூக்கை முழுமையாக மூடிய வண்ணம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் மற்றும் அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். பொதுமக்கள் தமிழக அரசு விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மற்றும் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வின்போது திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்‌‌‌ஷ்‌‌‌சிங்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், திருச்செந்தூர் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் வேல்முருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

19,724FansLike
34FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறுவர்கள் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மாவட்ட எஸ்‌‌‌.பி …..

0
கன்னியாகுமரி - ஜீன் - 19,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை. இந் நிலையில் இதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கணவனை இழந்துஆதரவற்று வசித்துவரும்பெண்களுக்கு மத்‌‌‌திய மண்‌‌‌டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும்பணம் வழங்கபட்‌‌‌டது

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்‌‌‌டம்‌‌‌ அழகிரி காலனி பகுதியில்கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் ஜெகதாம்பாள் 70 க/பெ சுந்தரம்ஆந்தாஸ் 68 க/பெ ஞானப்பிரகாசம்ஆகியோரைதிருச்சி மத்திய மண்டல காவல்துறை...

உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய லாரி ஓட்‌‌‌டுநருக்‌‌‌கு மத்‌‌‌திய மண்‌‌‌டல .ஐ.ஜி வெகுமதி...

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகம் வடுவூர் பகுதியில்கடந்த 12.06.21 அன்றுநள்ளிரவு ரோந்து பணியிலிருந்த இருசக்கரவாகன ரோந்து காவலர் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிய நிலையில்சாலையில்கிடந்தபோது அக்காவலரை...

போலீசாரின் நலன் கருதி சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

0
திருவாரூர் - ஜீன் -18,2021 திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைகாவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு குடிநீர் தளம்-திறப்புவிழாதிருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்344காவல் ஆளினர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள311 காவலர் குடியிருப்புகளில் காவலர் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில்அவர்களுக்கு...

போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தர்மபுரி - ஜீன் - 18,2021 சிறப்புகல்வி உதவித்தொகை இரண்டாவது தவணையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 25ஆயிரம் ரூபாய் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக...

தற்போதைய செய்திகள்