81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் சென்னை சிறப்பாக செயல்பட்ட சென்னை பெருநகர காவல், தேர்தல் பிரிவு துணை கமிஷ்‌‌‌னர்‌‌‌ மற்றும் காவல் குழுவினரை...

சிறப்பாக செயல்பட்ட சென்னை பெருநகர காவல், தேர்தல் பிரிவு துணை கமிஷ்‌‌‌னர்‌‌‌ மற்றும் காவல் குழுவினரை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌ கமிஷ்‌‌‌னர்‌‌‌ பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை – ஏப்ரல் – 29 ,2021

நமதுநிருபர் – ஹெச்.எம்.ரிஸ்வான்

கடந்த 06.4.2021 அன்று தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பணிக்கு, 27.02.2021 அன்று முதல் காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல்துறையின் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டு, மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷ்‌‌‌னர்‌‌‌ பாலசுப்ரமணியம் தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்‌‌‌கள்‌‌‌ கலந்‌‌‌து கொண்டு தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வந்தனர். தேர்தல் தொடர்பான வாக்குச்சாவடிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்கள், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் ஆகியவற்றின் விவரங்கள் சேகரித்தும், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் அறிக்கைகள் தயாரித்த வண்ணம் செயல்பட்டு வந்தனர். மேலும், தொகுதி வாரியாக விண்ணப்பத்திருந்த தேர்தல் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் சேகரித்து, தேர்தல் பாதுகாப்பு பணிக்கும், வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளிலும் காவல் ஆளிநர்கள், மத்திய துணை இராணுவத்தினர், வெளி மாநில காவல் குழுவினர், ஓய்வு பெற்ற காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் ஆகியோர் விவரங்கள் சேகரித்து பணி நியமனம் செய்தல் தொடர்பான பணிகளும் மேற்கொண்டு வந்தனர்.
இதன் பயனாக, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் அமைதியாகவும், எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படாமலும் நடைபெற்று முடிந்தது. பல்வேறு தரப்பினரும் பொதுமக்களும் அமைதியாக தேர்தல் நடைபெற காரணமாகயிருந்த சென்னை பெருநகர காவல் துறையின் பணியினை பாராட்டி வருகின்றனர். வருகிற 02.5.2021 அன்று வாக்கு எண்ணும் தேதியன்றும் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, திட்டப்படி உரிய நடவடிக்கைள் எடுத்து வருகின்றனர்.

மேற்படி சிறப்பாக செயல்பட்ட சென்னை பெருநகர காவல், தேர்தல் பிரிவின் பொறுப்பு அதிகாரி/துணை கமிஷ்‌‌‌னர்‌‌‌ பாலசுப்ரமணியம், கூடுதல் துணை கமிஷ்‌‌‌னர்‌‌‌கள்‌‌‌ ஆரோக்கியம், (மத்தியகுற்றப்பிரிவு) இராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை) மற்றும் காவல் குழுவினரை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌ கமிஷ்‌‌‌னர்‌‌‌ மகேஷ்‌‌‌குமார்‌‌‌ அகர்‌‌‌வால்‌‌‌ இன்று (29.4.2021) நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்