94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் அரியலூர் அரியலூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக...

அரியலூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

அரியலூர் – ஏப்ரல் – 13 ,2021

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முன்னிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சாலை பாதுகாப்பு மற்றும் கொரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கனரக வாகனங்கள் நெரிசலான பகுதிகளில் நிறுத்துவதை தவிர்த்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் கனரக வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக பாரம் ஏற்றி கொண்டு மற்றவர்களை முந்தி செல்வதையும் கனரக வாகன ஓட்டுநர்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும் விபத்து ஏற்பட கூடிய இடங்களில் எச்சரிக்கை பலகை, பேரிகார்டு மற்றும் வேகத்தடைகள் அமைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.

கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் கனரக வாகன ஓட்டுநர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கவும் , முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் சிமென்ட் ஆலையின் மக்கள் தொடர்பு அதிகாரிகள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை துறையினர், போக்குவரத்து காவல் ஆய்வாளர், 108 ஆம்புலன்ஸ் அலுவலர்கள், கனரக ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்