100 F
Tirunelveli
Thursday, September 16, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறை மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர் வாரிசுதாரர்கள் 20 பேருக்கு...

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறை மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர் வாரிசுதாரர்கள் 20 பேருக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் (Date Entry Assistant) அரசு பணியாணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் : 11.01.2021

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர்களின் வாரிதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசிற்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் மூலம் காவல்துறையில் பணியிலிருக்கும் போது உயிரிழந்த காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 20 பேருக்கு தகவல் பதிவு உதவியாளர் (Data Entry Assistant) பதவிகளில் தமிழக அரசு பணி நியமனம் செய்துள்ளது. மேற்படி அரசு பணியாணையை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று (11.01.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்.

மேற்படி பணியாணையை தமிழக காவல்துறையில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவலர் தெய்வத்திரு. மாரியப்பன் மனைவி சுஜாதா, சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. அய்யம்பிள்ளை மகன் சுந்தரபாண்டியன், காவலர் தெய்வத்திரு. இராஜசேகரன் மனைவி கல்யாணி, காவலர் தெய்வத்திரு. ஆண்டி மகன் அலெக்சாண்டர், தலைமைக் காவலர் தெய்வத்திரு. செல்வம் மகன் விக்ணேஷ், தலைமைக் காவலர் தெய்வத்திரு. ஜெயசீலன் மகன் வால்டர் ராய்சன்;, காவலர் தெய்வத்திரு. ஜான் போஸ்கோ மகன் ஸ்டீபன் ராஜ், தலைமைக் காவலர் தெய்வத்திரு. மாரிமுத்து மகள் ரத்னாதேவி, முதல் நிலைக் காவலர் தெய்வத்திரு. சங்கரநாராயணன் மனைவி அமுதா, தலைமைக் காவலர் தெய்வத்திரு. சுடலைமணி மகன் ராஜேஷ், தலைமைக் காவலர் தெய்வத்திரு. சுந்தர பாண்டியன் மகள் சிவகாமி செல்வி, உதவி ஆய்வாளர்; தெய்வத்திரு. சுப்பையா மகள் ரோகினி, தலைமைக் காவலர் தெய்வத்திரு. பொன்இசக்கி மகன் முருகேஷ், முதல்நிலைக் காவலர் தெய்வத்திரு. இராமலிங்கம் மனைவி சண்முகசுந்தரி, காவல் ஆய்வாளர் தெய்வத்திரு. ரவிச்சந்திரன் மனைவி திவ்யா, தலைமைக் காவலர் தெய்வத்திரு. அருணாச்சலம் மகள் விக்ணேஷ்வரி, காவலர் தெய்வத்திரு. ராஜ்குமார் மனைவி ஆனந்தம்மாள், சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. கிருஷ்ணன் மகன் ராதாகிருஷ்ணன், காவலர் தெய்வத்திரு. ஜான் ஆல்வின் டேவிட் மனைவி செல்வி ஜெயரூபி மற்றும் பணியிலிருக்கும் போது மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவல் அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர் தெய்வத்திரு. ராமகிருஷ்ணன் மகள் ரூபாதேவி ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், மாவட்ட காவல்துறை அலவலக நிர்வாக அலுவலர் திரு. சுப்பையா, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து அலுவலக கண்காணிப்பாளர் திரு. மயில்குமார், திரு. கணேச பெருமாள் மற்றும் உதவியாளர் திரு. கதிரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

19,724FansLike
47FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நேர்மிகு மனிதருக்கு சேலம் போலீஸ் கமிஷனர் பாராட்டு

0
சேலம் - செப் -16,2021 இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று தவறவிட்ட 1,00,000/-ஐ காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்தவர்களை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் வரவழைத்து கௌரவித்தார். 14.09.2021 ஆம் தேதி சேலம்...

“தூத்துக்குடி எஸ்.பியின் அதிரடி நடவடிக்கையால் 36,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள நிலம் மீட்பு….

0
தூத்துக்குடி - செப் -15,2021 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் மோசடி செய்த ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலம் மீட்பு - மாவட்ட...

தூத்துக்குடியில் தடகள போட்டியை மாவட்ட எஸ்.பி ஒழிப்பிக் ஜோதியை ஏற்றி துவக்கிவைத்தார்

0
தூத்துக்குடி - செப் - 15,2021 தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக இளையோர்களுக்கான தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தேசியக் கொடி ஏற்றி...

இனையதள மோசடி குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை கோவை எஸ்.பி வெளியிட்டார்

0
கோயம்புத்தூர் -செப்‌‌‌,14,2021 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செல்வநாகரத்தினம் இ.கா.ப.,  உத்தரவின்பேரிலும்,சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் சங்கு  வழிகாட்டுதலின் படியும், சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் . ஜெயதேவி  மற்றும் சைபர் கிரைம்...

பெண்கள்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ மாற்‌‌‌றுதிறனாளிகளுக்‌‌‌கு உதவ மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி விடியல்‌‌‌ என்‌‌‌கிற புதிய திட்‌‌‌டத்‌‌‌தை துவக்‌‌‌கினார்‌‌‌

0
கோயம்புத்தூர் - செப் - 14,2021 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ...

தற்போதைய செய்திகள்