94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு தமிழ்நாடு சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை - கொலையில் ஈடுப்ட்ட இருவரை உடனடியாக...

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – கொலையில் ஈடுப்ட்ட இருவரை உடனடியாக கைது செய்த சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிர்வேல்நகர் 1 வது தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் மாரிமுத்து (36) என்பவரும், தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த பச்சை பெருமாள் மகன் லட்சுமணன் (47) மற்றும் தூத்துக்குடி அண்ணாநகர் 7வது தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துகுமார் என்ற மதுரை முத்து (24) ஆகிய மூன்று பேரும் நண்பர்கள்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாரிமுத்து வெளியூர் சென்றிருந்தபோது, அவரது வீட்டில் பொருட்கள் திருடுபோனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது அவரது நண்பர்கள் தான் அங்குவந்து சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனால் நண்பர்கள் மீது சந்தேகம் அடைந்த மாரிமுத்து என்பவர் லட்சுமணனையும், முத்துகுமார் (எ) மதுரைமுத்துவையும் என் வீட்டில் ஏன் திருடினீர்கள் என்று கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு மாரிமுத்து மற்றும் அவரது சகோதரர் சின்னமுத்து ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ராஜகோபால் நகர் 4வது தெருவில் வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த லெட்சுமணன் மற்றும் முத்துகுமார் (எ) மதுரைமுத்து ஆகியோர் மாரிமுத்துவை வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) விமலா தலைமையில் உதவி ஆய்வாளர் சங்கர், முதல் நிலை காவலர் நாசர் மற்றும் காவலர் சிவக்குமார் ஆகியோர் எதிரிகள் லெட்சுமணன் மற்றும் முத்துகுமார் (எ) மதுரைமுத்து ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இசக்கிராஜா என்ற ராஜா என்பவர் தென்காசி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மேற்படி வழக்கின் தொடர்புடைய இரண்டு நபர்களை உடனடியாக கைது செய்த சிப்காட் காவல்நிலைய போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பாராட்டினார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்