94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகில் 1365 லிட்டர் கள்ளசாரயம் கண்டுபிடிப்பு தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

சின்னசேலம் அருகில் 1365 லிட்டர் கள்ளசாரயம் கண்டுபிடிப்பு தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

கள்ளக்குறிச்சி – ஜன – 15 , 2021

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனிப்படைகள் அமைத்து மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.


அதன்படி இன்று காலை 08.00 மணிக்கு சின்னசேலம் காவல் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் படி சின்னசேலம் ஆய்வாளர் ராஜா தலைமையிலான தனிப்படையினர், தலைமை காவலர் 125முஸ்தபா, முதல் நிலை காவலர் 2576 விஜய், காவலர்கள் கண்ணன் மற்றும் அக்பர்அலி ஆகியோர்கள் சகிதம் பங்காரம் கிராமத்தை சேர்ந்த பாலு (63) த/பெ தங்கவேல் என்பவரது வீட்டில் சோதனை செய்த போது 2 லாரி டியூபில் எரிசாசராயம் இருந்துள்ளது. அவரது வீட்டுற்கு அருகே இரண்டு வெள்ளை நிற வெற்று கேன் இருந்தது உடனடியாக சந்தேகப்பட்ட காவல்துறையினர் அருகில் புதிதாக தோண்டிய நிலத்தை சோதனை செய்தபோது மண்ணிற்கு உள்ளே புதைந்த நிலையில் தலா 35 லிட்டர் கொள்ளவு கொண்ட 39 வெள்ளை நிற கேன்களில் சுமார் 1365 லிட்டர் எரிசாராயம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இக்குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களான பாலு த/பெ தங்கவேல், மலர் (55) க/பெ பாலு ஆகியோரை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து, இனிவரும் காலங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ அல்லது விற்றாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்