86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பியாக ஓம் பிரகாஷ் மீனாஇன்று பொறுப்பேற்று கொண்டார்

நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பியாக ஓம் பிரகாஷ் மீனாஇன்று பொறுப்பேற்று கொண்டார்

நாகப்பட்டினம் – அக் : 14

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரகாஷ் மீனா அவர்கள் இன்று பொறுப்பேற்றுள்ளார். சென்னை தலைமையகத்திலிருந்து வந்த பணி நியமன உத்தரவின்படி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்த செல்வநாகரத்தினம் சென்னையில் நிர்வாக உதவி காவல்துறை தலைவராக பணியிடை மாற்றம் பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா சென்னையில் நிர்வாக உதவி காவல்துறை தலைவர் பதவியிலிருந்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதன்பொருட்டு இன்று காலை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை தந்த ஓம் பிரகாஷ் மீனா நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் கூடுதல் எஸ்.பி முருகேஷ் பூங்கொத்து கொடுத்து மரியாதையுடன் வரவேற்பு அளித்தார்கள். இதனைதொடர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது ;

பொதுமக்கள் மற்றும் சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குற்றங்கள் கண்டறியப்பட்டு அவற்றை தடுக்க நடவடிக்கைமேற்கொள்ளப்படும். காவல்துறை உயரதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் நாகை மாவட்ட காவல்துறை மக்கள் நலனுக்காக தொடர்ந்து சீரிய முறையில் பணியாற்றும் குற்ற வழக்குகள் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்தப்படும் காவல்துறை பொதுமக்களிடையே சுமூகமான முறையில் நல்லுறவு ஏற்படுத்தப்படும் என அவர் கூறினார்கள்.
மேலும் நாகப்பட்டினம் மாவட்ட பொது மக்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மேலும் டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்