86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு திருச்செந்தூரில் புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து காவல்துறை புறக்காவல் நிலையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ரிப்பன்...

திருச்செந்தூரில் புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து காவல்துறை புறக்காவல் நிலையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி – அக் : 15

14 ம்தேதி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருச்செந்தூர் மெயின் ஆர்ச் அருகே திருச்செந்தூர் போக்குவரத்து துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட ஒலிப்பெருக்கி வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், மக்களுக்கு சேவை செய்வதே காவல்துறையின் நோக்கமாகும். மேலும் தூத்துக்குடியின் முக்கிய நகரமான திருச்செந்தூர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் அடிக்கடி அதிகம் கூடுமிடமாகும். அதனால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் இடமாக திருச்செந்தூர் உள்ளது. இவ்வாறு அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைத்து மக்களுக்கு உதவும் நோக்கத்தோடு இப்புறக்காவல் நிலையம் போக்குவரத்து காவல்துறை முயற்சியால் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இப்புறக்காவல் நிலையம் மூலம் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைக்கப்படும் என்றும், கொரோன தொற்று நோய் வராமல் பாதுகாப்பாக இருப்பதற்கு முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் கைகளை அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசிகொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்தார். பின் இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுரகுடீநீர் மற்றும் முகக் கவசம் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் திருச்செந்துர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் வேல்முருகன், திருச்செந்தூர் வியாபாரிகள் சங்க தலைவர்கள் கணேசன். காமராஜ்,பெரியசாமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்