86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் எரித்து கொலை 12 மணிநேரத்தில் குற்றவாளி...

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் எரித்து கொலை 12 மணிநேரத்தில் குற்றவாளி கைது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தனிப்படையினருக்கு பாராட்டு

தூத்துக்குடி – அக் : 13

தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோட்டில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான காம்பவுண்டில் 26 வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு வீட்டில் நடராஜன் மகன் அண்ணாமலை என்ற சதீஷ் (42) என்பவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறார். இவர் அப்பகுதியில் டூவீலர் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். அதே காம்பவுன்டில் குடியிருந்து வந்த நசரேன் மெண்டிஸ் மகன் மரிய அந்தோணி தினேஷ் மென்டிஸ் (46) என்பவரும் அதே காம்பவுண்டில் உள்ள வீட்டில் குடியிருந்து வந்தார். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து அங்கு குடியிருப்பவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். அங்கு அருகில் உள்ள அனைத்து வீட்டாரிடம் தகராறு செய்துள்ளதால், மரிய அந்தோணி தினேஷ் மெண்டிஸ் அங்கிருந்து தனது வீட்டை காலி செய்து அந்தோணியார் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்குச் சென்று விட்டார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த மரிய அந்தோணி தினேஷ் மென்டிஸ் 12ம்தேதி இரவு குடிபோதையில் அங்கு வந்து, அண்ணாமலை என்ற சதீஷ் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக் உட்பட காம்பவுண்டில் நிறுத்தியிருந்த அனைத்து பைக்குகளுக்கும் தீவைத்துள்ளார். இதில் மளமளவென தீப்பற்றி எரிந்ததில் அண்ணாமலை வீட்டிற்குள் தீ பரவியது. இதில் அண்ணாமலை என்ற சதீஷ் மற்றும் அவரது அவரது மகன் நிதின் (8) தீக்காயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி அண்ணாமலை என்ற சதீஷ் உயிரிழந்தார்.

இந்த தகவலறிந்த தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் சம்பவம் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து கொலையாளிளை உடனே கைது செய்ய உத்தரவிட்டார்.

மேற்படி தனிப்படையினர் தீவிரமாக தேடி எதிரி மரிய அந்தோணி தினேஷ் மென்டிஸ் என்பவரை தூத்துக்குடி இனிகோ நகரில் இருந்தவரை இன்று கைது செய்தனர். மேற்படி தனிப்படையில் 12 மணி நேரத்தில் கொலையாளிளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்