86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினருக்கு மாவட்ட...

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி – அக் : 14

கடந்த 05.10.2020 அன்று தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்த இரண்டு எதிரிகளை கைது செய்து திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை கைப்பற்றிய தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கோகிலா தனிப்பிரிவு தலைமைக் காவலர் சிக்டஸ் ஜெனிவர் பெண் காவலர் மேரி பொன் ராணி ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

கடந்த 11ம்தேதி அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆற்று மணல் திருடி கடத்திச் சென்ற எதிரிகளை கைது செய்து, மணல் திருட பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்த ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், முதல் நிலை காவலர்கள் வேல்குமார், கண்ணன், காவலர் சந்திரசேகர் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்டப்பட்ட பகுதியில் நகை மற்றும் பணம் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை அடையாளம் கண்டு கைது செய்தும் திருடப்பட்ட ரூபாய் 45,000/- மதிப்புள்ள 3 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூபாய் 3000/- மும் கைப்பற்றிய நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர் அனந்த முத்துராமன் தலைமைக் காவலர் பிரேம்குமார் மற்றும் காவலர் ஆறுமுகசெல்வம் சிறந்த பணிக்காகவும்,

கடந்த 11ம்தேதி அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து காணாமல் போன பெண்ணை மீட்டு அந்த இல்லத்தில் ஒப்படைத்தும், தட்டப்பாறை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து தப்பிச் சென்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் சுற்றித் திரிந்த இரு சிறுவர்களை பிடித்து சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்த சிப்காட் காவல் நிலைய காவலர்கள் சுமித்ரன் மற்றும் நாசர் அலி ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காவும்,

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொள்ளை வழக்கில் திறம்பட செயல்பட்டு சம்பந்தபட்ட எதிரியை கைது செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலர் ரமேஷ், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர்கள் கருப்பசாமி மற்றும் செல்வக்குமார் ஆகியோரின் சிறந்த பணிக்காவும்,

காவல் ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் காவல்துறை ஏடிஎஸ்பி செல்வன் உடனிருந்தார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்