80.5 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு தமிழ்நாடு கோவில்பட்டியில் புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல் மற்றும் சி.சி.டி.வி கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவில்பட்டியில் புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல் மற்றும் சி.சி.டி.வி கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி போக்குவரத்து சிக்னல் மற்றும் சி.சி.டி.வி கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முக்கிய இடங்களில் 10 சிசிடிவி கேமராக்களும், கோவில்பட்டி கால்நடை மருத்துவமனை சந்திப்பில் தானியங்கி போக்குவரத்து சிக்னலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை அங்கேயே அமைக்கப்பட்டுள்ள தனி அறை மூலம் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த தானியங்கி போக்குவரத்து சிக்னல் மற்றும் சிசிடிவி கேமராவை இன்று (02.10.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கபசுரக்குடிநீர் வழங்கினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேசுகையில் தானியங்கி கேமரா மற்றும் 10 சிசிடிவி கேமராக்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது, கோவில்பட்டி நகரம் மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்கள் உட்பட அனைத்து பகுதியிலும் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான பணிகளை தூத்துக்கு மாவட்ட காவல்துறை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. அதே போல இன்று பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கான சில மூலிகை மருந்துகள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும், கைகளை அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், தமிழக அரசு விதித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்வின் போது கோவில்பட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் முருகன், கோவில்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் கலைக் கதிரவன், கோவில்பட்டி கிழக்கு காவல் நியைல ஆய்வாளர் சுதேசன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் நாராயணசாமி உள்ளிட்ட காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை….

0
சென்னை - ஆகஸ்ட் -01,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 19...

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

தற்போதைய செய்திகள்