84.7 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு தமிழ்நாடு ஹைவே பேட்ரோல் வாகனங்களுக்கும் அதில் பணியாற்றும் காவல்துறையினருக்கும் பயன்பெரும் வகையில் 16 லட்சம்...

ஹைவே பேட்ரோல் வாகனங்களுக்கும் அதில் பணியாற்றும் காவல்துறையினருக்கும் பயன்பெரும் வகையில் 16 லட்சம் மதிப்புள்ள கருவிகளை வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் வழங்கினார்மற்றும் வேலூர் சரக டிஐஜி காமினி ஆகியோர் உடனிருந்தனர்

இராணிபேட்டை – அக்: 06

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை இராணிப்பேட்டை,
வேலூர்,திருப்பத்தூர் மாவட்டங்களாக தமிழக முதல்வரால் நிர்வாக காரணங்களுக்காக பிரிக்கப்பட்டது. இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதற்காகவும், குற்றங்கள் நடக்காவண்ணம் தடுப்பதற்காகவும் கடந்த ஜனவரி மாதம் பிரத்யேக ரோந்து அமைப்பு டெடிகேட்டடு பீட் சிஸ்டம் காவல்துறை தலைவர் வடக்கு மண்டல ஐ ஜி நாகராஜனால் துவக்கிவைக்கபட்டது அதன் தொடர்ச்சியாக பிரத்தியேக ரோந்து அமைப்பு பொதுமக்களிடம் நல் வரவேற்பை பெற்றதன் காரணமாக இதனை நவீன தொழில்நுட்ப முறையில் மேம்படுத்தவும், திறம்பட செயல்படவும் மாவட்டத்திலுள்ள 1150 பட்டா புத்தகங்களையும் கியுஆர்கோடு மூலமாக ஸ்கேன் செய்யும் ரோந்து கண்காணிப்பு அமைப்பு பீட்‌ மானிட்டிரீங் சிஸ்டம் என்ற செயலி ஜீன் மாதம் 26 ஆம் தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகன் துவக்கிவைத்தார் . இச்செயலி மூலமாக மாவட்டத்திலுள்ள அனைத்து ரோந்து அலுவலர்களின் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் காவல்துறையினை நவீனப்படுத்தும் நோக்குடன் ரோந்து காவலர்களுக்கு விபத்துகளை தவிர்ப்பதற்காக ஒளியை பிரதிபலிக்கும் ஆடைகள் ஒளிரும் சட்டைகள் போக்குவரத்தினை சீர்செய்ய கோல் விளக்குகள் பட்டன் லைட்ஸ் முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்வதற்காக உடலில் அணியும் கேமராக்கள் பாடி ஓன் கேமராஸ் பொதுமக்கள் மற்றும் காவல்துறையின் பாதுகாப்பினை உறுதி செய்ய டார்ச் லைட்டுகள், ஆய்வாளர்களின் இயக்கம் மற்றும் செயல்பாடுகள் முக்கிய சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஆகியவற்றை கண்காணிக்க வாகனத்தில் பொருத்தும் கேமராக்கள் டேஷ் போடு கேமரா மற்றும் காவல்துறையின் ரோந்து அனைவருக்கும் தெரியும் விதத்தில் விஷிபல் பாலிசிங் அமைய வாகனத்தின் மேற்புறத்தில் வண்ண நிறத்தில் எரியும் விளக்குகள் பிலிங்கர் ஆகியவை சுமார் ரூ.16,00,000 மதிப்பீட்டில் சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து வாங்கப்பட்டு அதனை இன்று காவல்துறைத் தலைவர் வடக்கு மண்டலம் ஐஜி நாகராஜன் துவங்கிவைத்தார் இந்நிகழ்ச்சியில் வேலூர் சரக டிஐஜி காமினி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் இராணிபேட்டை டிஎஸ்பி பூரணி, அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் ஆகியோர் மற்றும் காவல் ஆய்வாளர்கள்,ரோந்து அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

போலி உதவி கமிஷனர் கைது – மாவட்ட எஸ்.பியின் ஸ்கெட்ச்

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -03,2021 முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தமிழகத்தை தவிர்த்து மற்றும் பல மாநில முதல்வர்களுடன் சந்தித்து போட்டோ எடுத்து அதை முகநூலில் பதிவு...

தற்போதைய செய்திகள்