91 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் அரியலூர் புகைப்பட கண்காட்சி பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன் பங்கேற்பு

புகைப்பட கண்காட்சி பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன் பங்கேற்பு

அரியலூர் – அக் :11

அரியலூர் இளைஞர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து வழிநடத்தி வரும் அரியலூர் சோழதேசம் அமைப்பு இன்று இணையதளம் வாயிலாக நடைபெற்ற புகைப்பட கண்காட்சியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட காவல்துறை போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் போட்டியில் வென்றவர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறி பரிசுகளை அளித்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கொரானா பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கேடயம் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதற்கான துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் பசுமையை உருவாக்க அதிகப்படியான மரக்கன்று நட்பு பராமரிக்கவும், பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கவும், ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்கவும் கேட்டுக்கொண்டார். மேலும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாவட்டத்தில் குற்றங்கள் நிகழாவண்ணம் தடுக்க பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கயர்லாபத் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா அவர்கள் சாலை பாதுகாப்பு, கேடயம் திட்டம் மற்றும் குழந்தை பாதுகாப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியின் நிறைவாக கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள், தன்னார்வலர்கள், பெண்கள் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் வன்முறையற்ற, பாதுகாப்பான அரியலூர் மாவட்டத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் மற்றும் அரியலூர் சோழதேசம் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

சென்னையில் கொரனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் நலன்கருதி வாட்ஸ் ஆப் எண் மூலம்...

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் கொரோனா தொற்று நோய் பரவலினால், பொதுமக்கள் TV மூலம்‌‌‌ தங்கள் குறைகளை காவல் ஆணையாளரை நேரடியாக சந்தித்து தெரிவிக்க முடியாத நிலையில்,போலீஸ்‌‌‌ கமிஷனர்...

தற்போதைய செய்திகள்