81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று ஆய்வு செய்து, வாகனத்தை சிறந்த முறையில் பராமரித்து வரும் காவல்துறை வாகன ஓட்டுனர்கள் 5 பேருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி – அக் :10

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் இன்று ஆய்வு செய்து, வாகனத்தை சிறந்த முறையில் பராமரித்து வரும் காவல்துறை வாகன ஓட்டுனர்கள் 5 பேருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உட்பட 193 வாகனங்களை மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் செய்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது காவல்துறையின் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வருண் வாகனத்தை இயக்கக்கூறி, அதன் செயல்பாட்டையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது நான்கு சக்கர வாகனங்களை சிறந்த முறையில் பராமரித்து வந்த நாசரேத் காவல் நிலைய காவலர் கார்த்திக் செல்வன், கோவில்பட்டி போக்குவரத்து காவலர் ராஜகுரு, தாளமுத்து நகர் காவல் நிலைய காவலர் சுந்தர், கனரக வாகன பராமரிப்பிற்காக ஆயுதப்படை தலைமைக் காவலர் சலைத்நாதன் மற்றும் இரு சக்கர வாகன பராமரிப்பிற்காக தெர்மல் நகர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் சிக்டஸ் ஜெனிவர் ஆகிய 5 காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி பாராட்டி பரிசு வழங்கினார். வாகனங்களை பராமரித் சிறந்த முறையில் பராமரித்து வந்த வாகன ஓட்டுனர்கள் 5 பேருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.பின் மாவட்ட எஸ்.பி காவல்துறை வாகன ஓட்டுனர்களின் குறைகளை கேட்டறிந்து, நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும், சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். எவ்வித விபத்தும் ஏற்படா வண்ணம் வாகனம் ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இந்த வாகன ஆய்வின் ஏடிஎஸ்பிக்கள் செல்வன் மற்றும் ஸகோபி, பயிற்சி ஏஎஸ்பி அபிஷேக் குப்தா தூத்துக்குடி ஆயுதப்பபடை டிஎஸ்பி கண்ணபிரான், ஆயுதப்படை (பொறுப்பு) போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்