86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் 10,000 பனை மர விதைகள் நடும் விழா மாவட்ட...

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் 10,000 பனை மர விதைகள் நடும் விழா மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி – அக்: 08

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் இன்று 10,000 பனை மர விதைகள் நடும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் கலந்து கொண்டு பனை விதைகள் நட்டு விழாவை துவக்கி வைத்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்ந்து தூத்துக்குடி காவல்துறை கூடுதல் எஸ்.பி செல்வன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பனை மர விதைகளை நட்டனர்.

பின் மாவட்ட எஸ்.பி தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்களுக்கு கபசுரக்குடிநீர், முகக்கவசம் மற்றும் சானிடைசர் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது, அவர் இந்த துப்பாக்கி சுடும் தளம் 96 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இதன் எல்லை ஓரங்களில் 10,000 பனை மர விதைகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு இன்று நடைபெற்று வருகிறது. பனை மரம் வளர்ப்பது பல வகைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பனை மரங்களை மணற்பாங்கான மற்றும் சரிவான பகுதிகளில் வளர்ப்பதன் மூலம் மணல் அரிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும், ஏனென்றால் ஆணி வேரை விட பக்கவாட்டில் செல்லக்கூடிய சல்லி வேர்கள் அதிகம். இதனால் மண் வளம் மற்றும் நீர் வளம் அதிகரிக்கும். ஒரு காலத்தில் பனை மரங்கள் அதிகம் இருந்தது, அவற்றை வெட்டி விட்டனர். இப்போதுதான் அதன் பயன்களை அறிந்து லட்சக்கணக்கான பனை மர விதைகளை நட்டு பனை மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும், தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டு வருகிறது. இருப்பினும் இன்னும் ஓரிரு ஆண்டுகள் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும், எல்லோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் முழுமையாக கொரோனா தொற்றிலிருந்து விடுபட முடியும். அதே போன்று இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்தும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் சீட் பெல்ட் அணிந்தும் செல்ல வேண்டும் என்றும், மிகக்குறுகிய கால அவகாசததில் 10,000 பனை விதைகளை பெற்று இதற்கு ஏற்பாடு செய்த தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்ட காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் மாவட்ட எஸ் பி ஜெயக்குமார் பேசினார்.

இந்த பனை மர விதை நடும் விழாவிற்கு தூத்துக்குடி காவல்துறை கூடுதல் எஸ்.பி செல்வன் முன்னிலை வகித்தார். காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் நன்றியுரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன், உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், செல்வராஜ், சொக்கலிங்கம், லிவிங்ஸ்டன், சக்திவேல் மற்றும் தலைமை காவலர் ராஜா உள்ளிட்ட ஆயுதப்படை காவல்துறையினர் செய்திருந்தனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்