82.2 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் பகுதிகளில் பகுதியில் பைக்குகள் திருடிய இருவர் கைது, அவர்களிடமிருந்து 6...

தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் பகுதிகளில் பகுதியில் பைக்குகள் திருடிய இருவர் கைது, அவர்களிடமிருந்து 6 பைக்குகள் பறிமுதல் கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டு.

தூத்துக்குடி -அக் :05

தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் பகுதிகளில் பகுதியில் பைக்குகள் திருடிய இருவர் கைது, அவர்களிடமிருந்து 6 பைக்குகள் பறிமுதல் கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டு.

தெர்மல்நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த சுடலைமணி மகன் சந்தனமுத்து (20) என்பவரது இரு சக்கர வாகனம் நகர் விலக்கு பகுதியிலும், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூரைச் சேர்ந்த செல்லப்பா மகன் செல்வமதுகரன் என்பவரது இரு சக்கர வாகனம் அதே பகுதியிலும், தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் மதன்குமார் (30) என்பவரது வாகனம் கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும், தூத்துக்குடி முள்ளக்காட்டைச் சேர்ந்த மூக்காண்டி மகன் முனியசாமி (27) என்பவரது வாகனம் அதே கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி மணி மகன் தினேஷ் (19) என்பவரது வாகனம் நகர் விலக்கு அருகேயும் மற்றும் விளாத்திக்குளம், பல்லாகுளத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் வரதராஜ் (25) என்பவரது வாகனமும் கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும் கடந்த ஜீலை 31 முதல் செப்டம்பர் 19 வரை 6 பேர்களது இரு சக்கர வாகனங்கள் திருடு போயிருந்தது. இது குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தொடர்ந்து இரு சக்கர வாகன திருட்டு ஒரே பகுதியில் தொடர்ந்து நடந்து வந்ததையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் தெர்மல்நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோகிலா,உதவி ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், பென்சன் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக்காவலர் ஜெனிவர் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

அதன்பேரில் மேற்படி தனிப்படையினர் தெர்மல்நகர் காவல்நிலைய எல்லைக்குட்டபட்ட பகுதிகளில் வாகனம் திருடுபோன நேரங்களை கணக்கிட்டு எதிரிகளை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படையினர் இன்று (05.10.2020) காலை 11.00 மணிக்கு மீண்டும் திருச்செந்தூர் ரவுண்டானா அருகே ஹார்பர் ரோட்டில் வாகன தணிக்கை செய்தபோது, இரு சக்கர வாகனங்களை திருடும் எண்ணத்துடன் வந்த திருநெல்வேலி தச்சநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலகிருஷ்ணன் (24) மற்றும் தச்சநல்லூர் மேலக்கரை நியூகாலனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சக்தி கணேஷ் (24) ஆகிய இருவரையும் மடக்கி பிடித்து விசாரிக்க அவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களில் தெர்மல்நகர் காவல்நிலைய சரக பகுதிகளில் சுமார் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேற்படி தனிப்படையினர் இருவரையும் கைது செய்து, அவர்கள் திருடிய 6 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

துரிதமாக செயல்பட்டு இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் 2 எதிரிகளை கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்த தெர்மல் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை….

0
சென்னை - ஆகஸ்ட் -01,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 19...

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

தற்போதைய செய்திகள்