82 F
Tirunelveli
Wednesday, August 4, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் விஷம் அருந்தி ...

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் விஷம் அருந்தி தற்கொலை – மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை.

தூத்துக்குடி அக் -01

திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலராக செல்வமுருகன் கடந்த 14.07.2020 முதல் பணியாற்றி வருகிறார்.

இவர் 01.05.1976 அன்று பிறந்தவர், இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி. இவரது தந்தை பெயர் கணபதி, இவருக்கு அருணா (42) என்ற மனைவியும், கமலேஷ் (18) மற்றும் அகிலேஷ் வர்ஷன் (8) என்ற இரு மகன்கள் உள்ளனர். கடந்த 24.05.1999 அன்று இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த இவர் தற்போது பதவி உயர்வுகள் பெற்று தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டார்மடம், தருவைக்குளம், ஆறுமுகநரி, திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றி, சிறப்பாக பணியாற்றியமைக்காக உயர் அதிகாரிகளிடம் பல வெகுமதிகள் பெற்று பாராட்டப்பட்டவர்.

இந்நிலையில் இவர் இன்று (01.10.2020) காலை உடன்குடி கூலையன்குன்று பகுதியில் பனங்காட்டில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து குலசேகரப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்