86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் தூத்துக்குடி ஏடிஎஸ்பி செல்வன் ஆய்வு .

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் தூத்துக்குடி ஏடிஎஸ்பி செல்வன் ஆய்வு .

தூத்துக்குடி – அக் :09

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வன் நிலையத்தில் ஆய்வு .

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் தினமும் காலை 07.00 மணிக்கு ஆஜர் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஏடிஎஸ்பி செல்வன் அவர்கள் தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் உள்ள சிப்காட் காவல் நிலையத்தில் இன்று நடைபெற்ற காலை ஆஜர் அணிவகுப்புக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சிப்காட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் பற்றியும், காவல் நிலைய ஆளினர்களின் செயல்பாடுகள் குறித்தும், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் பொதுமக்கள் அளித்த புகார் சம்மந்தமாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட புகார் மனுக்களையும் ஆய்வு செய்தார். காவல் நிலைய பதிவேடுகளையும் பார்வையிட்டார். பின் காவல் நிலைய ஆளினர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து காவல் ஆளினர்களுக்கும் கொரோனோ வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த ஆய்வின்போது சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன், உதவி ஆய்வாளர் சங்கர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்