80.5 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது -...

தூத்துக்குடி மாவட்டம்
ஏரல் அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது – ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 13 பவுன் தங்க நகைகள் மீட்பு – கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு

தூத்துக்குடி – அக்: 03



தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடையற்காடு தெற்கு தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பிச்சையம்மாள் (62) என்பவர் தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 13 பவுன் எடை கொண்ட தங்க நகைகள் 5 மோதிரம், ஒரு கைச்செயின் மற்றும் ஒரு இரண்டு வடச்செயின் ஆகியவற்றை 15 மே அன்று யாரோ வீடு புகுந்து திருடிச் சென்று விட்டதாக மே‌ மாதம் 16 அன்று பிச்சையம்மாள் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துலெட்சுமி தலைமையில் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு, சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜேம்ஸ் மற்றும் காவலர் செந்தில் குமார் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய உத்தரவிட்டார்
அதன்படி தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் (03 ம்தேதி இன்று‌கொற்கையில் உள்ள ஒரு வங்கியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஏரல், இடையற்காடு வடக்குத்தெருவைச் சேர்ந்த மகாராஜன் மகன் ராமஜெயம் (37) என்பவரை விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். அதனால் தனிப்படை போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை செய்ததில் அவர் கொத்தனார் வேலை பார்த்து வருவதாகவும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புகார்தாரர் பிச்சையம்மாள் வீட்டில் ஏணிப்படி கட்டும் வேலைக்கு சென்று வந்ததாகவும், அப்போது பேச்சியம்மாள் மகன் மற்றும் மகள் வெளியூரில் வசித்து வருகின்றனர் என்பதையும், வயதான பிச்சையம்மாள் மற்றும் அவரது கணவர் செல்வராஜ் ஆகியோர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருவதையும் தெரிந்து வைத்துள்ளார்.*

இதனை நோட்டமிட்ட எதிரி ராமஜெயம் 15.05.2020 அன்று செல்வராஜ் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். பின் திருடிய நகைகளை ராமஜெயம் தனது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுத் தொழுவத்தில் குழி தோண்டி புதைத்து வைத்துவிட்டு, யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்றவுடன் அவற்றை அங்கிருந்து எடுத்து கொற்கை மற்றும் சிவத்தையாபுரத்தில் உள்ள வங்கிகளிலும் மற்றும் சாயர்புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திலும் அடமானம் வைத்து, அந்தப் பணத்தை ராமஜெயம் வட்டிக்கு வாங்கிய கடனை அடைத்துள்ளார்.

இது குறித்து தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள வங்கிகளில் விசாரணை செய்து வருவைதையறிந்த எதிரி ராமஜெயம் மேற்படி அடகு வைத்த திருட்டு நகைகளை திருப்புவதற்காக நின்று கொண்டிருந்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டார்

அதனடிப்படையில் தனிப்படை போலீசார் ராமஜெயத்தை கைது செய்து, திருடிய 13 பவுன் தங்க நகைகளையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.*அதனடிப்படையில் தனிப்படை போலீசார் ராமஜெயத்தை கைது செய்து, திருடிய 13 பவுன் தங்க நகைகளையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை….

0
சென்னை - ஆகஸ்ட் -01,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 19...

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

தற்போதைய செய்திகள்