86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி மற்றும் திருச்செந்தூர் காவல் நிலையங்களின் காலை 7 மணி ஆஜர்...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி மற்றும் திருச்செந்தூர் காவல் நிலையங்களின் காலை 7 மணி ஆஜர் அணிவகுப்பிற்கு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் திடீரென சென்று ஆய்வு.

தூத்துக்குடி – அக் : 07

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி மற்றும் திருச்செந்தூர் காவல் நிலையங்களின் காலை 7 மணி ஆஜர் அணிவகுப்பிற்கு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் திடீரென சென்று ஆய்வு.

தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காலை 7 மணி ஆஜர் அணி வகுப்பு நடைபெறுவது வழக்கம். இந்த ஆஜர் அணி வகுப்பின்போது முக்கிய பணிகளில் இருப்பவர்கள் தவிர மற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவரும் கலந்து கொள்வர்.

இந்த ஆஜர் அணிவகுப்பின்போது, அந்தந்த காவல் நிலையங்களில் பணிபுரியம் காவல்துறையினருக்கு அன்றாடம் என்னென்ன அலுவல்கள் யார், யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், அதை எவ்வாறு செய்ய வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கப்படும். இதில் வாரத்தில் ஒரு நாள் காவலர்களுக்கான கவாத்து நடைபெறும், மற்றொரு நாள் காவல் நிலையம் மற்றும் துப்பாக்கிகளை சுத்தம் செய்து பராமரித்தல் போன்ற பணிகள் நடைபெறுவது வழக்கம்.

அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் அனைத்து காவல் நிலையங்களிலும் காலை 7 மணிக்கு ஆஜர் அணி வகுப்பு நடைபெற்று வருகிறது. இதில் அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கலந்து கொள்வார்கள்.

காவல் நிலைய பணிகள் ஒழுங்காக சட்டப்படி நடைபெற்று வருகிறதா என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவ்வப்போது கண்காணித்து வருகிறார்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று காலை 7 மணி ஆஜர் அணிவகுப்பிற்கு ஆறுமுகநேரி மற்றும் திருச்செந்தூர் காவல் நிலையங்களுக்கு திடிரென சென்று ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார்.

இந்த அணிவகுப்பின்போது முக்கிய அலுவல்களில் சென்றுள்ளவர்களை தவிர ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் செல்வி உட்பட தலைமை காவலர்கள், காவலர்கள் ஆஜராகியிருந்தனர். அதே போன்று திருச்செந்தூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் முத்துராமன் உட்பட தலைமை காவலர்கள், காவலர்கள் உட்பட அனைவரும் ஆஜராகியிருந்தனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்