82 F
Tirunelveli
Wednesday, August 4, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினருக்கு வழக்கு நாட்குறிப்பை திறம்பட எழுதுவது குறித்த 5 நாள் புத்தாக்க பயிற்சி...

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினருக்கு வழக்கு நாட்குறிப்பை திறம்பட எழுதுவது குறித்த 5 நாள் புத்தாக்க பயிற்சி 2வது பிரிவினருக்கான மாவட்ட காவல் அலுவலக வளாக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி – அக்: 05

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு தங்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் வழக்கு நாட்குறிப்பு எவ்வாறு திறம்பட எழுத வேண்டும் என்றும், வழக்கு நாட்குறிப்பில் எழுதப்படும் வழக்குகளின் விபரங்களின் மூலம் எதிரிக்கு தண்டனை பெறும் வகையில் எவ்வாறு வழக்கு நாட்குறிப்பை கையாள வேண்டும் என்பவை பற்றிய 5 நாள் புத்தாக்க பயிற்சி 2வது பிரிவினருக்குன 2ம் பேட்ச் வகுப்பை தூத்துக்குடி மாட்ட காவல் அலுவலக வளாக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்த புத்தாக்கப்பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு உட்பட 58 காவல் நிலையங்களிலிருந்து, காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை ஒரு காவல் நிலையத்திற்கு 6 பேர் வீதம் மொத்தம் 348 பேருக்கு 6 பிரிவுளாக தலா ஒவ்வொரு பிரிவிற்கும் 5 நாட்கள் பயிற்சிளிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 58 காவல் நிலையங்களிலிருந்து ஒரு காவல் நிலையத்திற்கு ஒருவர் வீதம் 58 பேருக்கு 2வது பிரிவினருக்கான பயிற்சி இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த புத்தாக்க பயிற்சி வகுப்பு தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன் தலைமையில் தூத்துக்குடி காவல் கட்டுப்பாட்டு அறை ஏழுமலை, மாவட்ட குற்ற ஆவண காப்பகம் ஆய்வாளர் ஜெரால்டுவின் மற்றும் தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா ஆகியோர் பயிற்சியளித்து வருகின்றனர்.

இந்த புத்தாக்க பயிற்சி வகுப்பில் காவல்துறையினருக்கு வழக்கு நாட்குறிப்பை சிறந்த முறையில் எவ்வாறு எழுத வேண்டும் என்பது பற்றி அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பழனிச்சாமி அவர்கள் சிறப்பு விரிவுரையாளராக கலந்து கொண்டு பயிற்சியளித்தார்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்