82 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினருக்கு மாவட்ட...

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி – அக்-05

கடந்த 28.09.2020 அன்று நாலாட்டின்புதூர் காவல் நிலையம் மற்றும் கயத்தார் காவல் நிலைய செயின்பறிப்பு வழக்குகளில் சம்மந்தப்பட்ட, எதிரிகளான மதுரை மவாட்ட கீழவளைவு கிராமத்தை சேர்ந்த அய்யனார் மற்றும் சூரியா ஆகியோர்களை சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் கைது செய்து வழக்கில் சம்மந்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற உதவியாக இருந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் திருமதி. சுகாதேவி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிலுவை ஆந்தோணி, கோவில்பட்டி கிழக்கு (குற்றம்) காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர்முருகன் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் ஸ்ரீராம், ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

கடந்த 22.09.2020 புதியம்புத்தூர் காவல் நிலைய திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியான மாயக்கிருஷ்ணன் என்பவரை கைது செய்ய உதவியாக இருந்த தட்டப்பாறை காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் விக்னேஷ் என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்டப்பட்ட, பகுதியில் ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன சுமார் 50 வயது மதிக்கதக்க பெண்ணை கண்டுபிடித்து, சென்னையில் இருந்தவரை அழைத்துவந்து அவருடைய குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், பெண் தலைமைக் காவலர் அலாய்ஷியஸ் ரோசாரி மேக்ஸினா மற்றும் காவலர் ஆறுமுக நயினார் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

கடந்த 25.09.2020 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கின் எதிரியை அடையாளம் கண்டு கைது செய்து, வழக்கின் சொத்தான 7¾ சவரன் தங்க சங்கிலியை கைப்பற்ற உதவியாக இருந்த புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்து கணேஷ், தலைமைக் காவலர் திரு. கருப்பசாமி துரை, முதல் நிலை காவலர் திரு. ராம்பாபு மற்றும் காவலர் ஜாண்சன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காவும்,

கடந்த 16.05.2020 அன்று ஏரல் காவல் நிலைய கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியை அடையாளம் கண்டு கைது செய்து வழக்கின் சொத்தான 13 பவுன் தங்க நகைகளை கைப்பற்ற உதவியாக இருந்த ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் வில்லியம்ஸ் மற்றும் காவலர் செந்தில் குமார் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

கடந்த 12.09.2020 அன்று சாத்தான்குளம் காவல் நிலைய கொள்ளை வழக்கின் எதிரியான கார்த்தீசன் என்பவரை அடையாளம் கண்டு கைது செய்ய உதவியாக இருந்த சாத்தான்குளம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் சபாபதி என்பவரின் மெச்ச தகுந்த பணிக்காவும்,

காவல் ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட பயிற்சி ஏஎஸ்பி அபிஷேக் குப்தா தூத்துக்குடி காவல்துறை கூடுதல் சூப்பிரண்டு செல்வன் ஆகியோர் உடனிருந்தார்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்