81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளுக்காக இன்று 9 சிறப்பு முகாம்கள் மூலம் நடத்தப்பட்ட...

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளுக்காக இன்று 9 சிறப்பு முகாம்கள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் 34 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என தூத்துக்குடி மாவட்ட எஸ் பி ஜெயக்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி- அக் : 03

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் (Missing Person) பற்றிய வழக்குகளுக்காக இன்று 9 சிறப்பு முகாம்கள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் 34 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்த காணாமல் போனவர்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து கண்டு பிடிக்க 9 சிறப்பு முகாம்கள் அமைத்து இன்று விசாரனை நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் நிலுவையிலிருந்த 53 வழக்குகளுக்கு 28 வழக்கின் மனுதாரர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர், இந்த சிறப்பு முகாம் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் 3 வழக்குகளில் காணாமல் போனவர்கள் 3 பேர் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 18 வழக்குகளுக்கு 12 மனுதாரர்கள் கலந்து கொண்டனர், இதில் 3 பேர் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 54 வழக்குகளுக்கு 15 மனுதாரர்கள் கலந்து கொண்டனர், இதில் 10 பேர் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மணியாச்சி உட்கோட்டத்தில் 7 வழக்குகளுக்கு 7 மனுதாரர்கள் கலந்து கொண்டனர், இதில் 2 பேர் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி உட்கோட்டத்தில் 62 வழக்குகளுக்கு 40 மனுதாரர்கள் கலந்து கொண்டனர், இதில் 11 பேர் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விளாத்திக்குளம் உட்கோட்டத்தில் 17 வழக்குகளுக்கு 9 மனுதாரர்கள் கலந்து கொண்டனர், இதில் 3 பேர் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 29 வழக்குகளுக்கு 11 மனுதாரர்கள் கலந்து கொண்டனர், இதில் 2 பேர் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் காணாமல் போனவர்கள் குறித்து பதிவு செய்யப்பட்டு நிலுவையிலிருந்த 240 வழக்குகளில், அவ்வழக்குகளின் மனுதாரர்கள் 122 பேர் கலந்து கொண்டனர். அதில் 34 வழக்குகளில் 34 பேர்கள் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்