84.7 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளில், காணாமல் போனவர்களை விரைந்து கண்டு பிடித்து தீர்வு...


தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளில், காணாமல் போனவர்களை விரைந்து கண்டு பிடித்து தீர்வு காணும் வகையில் 9 இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி ராஜ் மஹாலில் நடைபெறும் இந்த முகாமை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்

தூத்துக்குடி – அக்டோபர் : 03

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்து வருவதால், அவற்றிற்கு விரைந்து தீர்வு காண்பதற்கு அந்தந்த பகுதி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காணாமல் போனவர்களின் உறவினர்களை அழைத்து சிறப்பு முகாம்கள் அமைத்து விசாரணை நடத்த அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி தூத்துக்குடி உட்கோட்டத்திற்கு தூத்துக்குடி ராஜ் மஹாலிலும், தூத்துக்குடி ஊரகத்திற்கு புதுக்கோட்டை சத்யா மஹாலிலும், திருச்செந்தூர் உட்கோட்டத்திற்கு திருச்செந்தூர் எழுவர் சாலியர் மடம், ஆத்தூர் INTUC மஹால் மற்றும் குலசேகரப்பட்டினம் PAP மஹால் ஆகிய 3 இடங்களிலும், சாத்தான்குளத்திற்கு TDTA புலமாடன் செட்டியார் மேல் நிலைப்பள்ளியிலும், மணியாச்சிக்கு ஒட்டப்பிடாரத்தில் உள்ள VOC பள்ளியிலும், விளாத்திக்குளத்திற்கு RPK மஹாலிலும், கோவில்பட்டிக்கு லெட்சுமி மஹாலிலும் ஆகிய 9 இடங்களில் இந்த முகாம் இன்று நடைபெற்று வருகிறது.

இன்று (03.10.2020) தூத்துக்குடி ராஜ் மஹாலில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பு இளங்கோவன் அவர்கள் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்த முகாமில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று சிறப்புரையாற்றி இந்த முகாம் விசாரணை துவக்கி வைத்தார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகள் மீதான விசாரணை நீண்ட காலமாக நிலுவையிலிருப்பது கவனத்திற்கு வந்ததால், இந்த காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காக இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமிற்கு வந்துள்ள வழக்கின் மனுதாரர்கள் மற்றும் உறவினர்களாகிய நீங்கள், காணாமல் போனவர்களை பற்றிய முழு விவரங்களை காவல்துறையினருக்கு அளித்து ஒத்துழைப்பு தருவதன் மூலம் காணாமல் போனவர்களை, எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக கண்டு பிடிக்க எளிதாக இருக்கும். இதில் சில வழக்குகளில் காணாமல் போனவர்கள் கிடைத்திருக்கலாம், அவ்வாறு இருந்தாலும் மேற்படி வழக்குகள் குறித்து நீங்கள் விபரம் அளித்தால் நன்றாக இருக்கும். இந்த கூட்ட அரங்கில் தூத்துக்குடி நகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் உங்கள் முன் உள்ளனர். உங்கள் வழக்குகள் பற்றிய முழு விபரங்களை தெரிவிக்கலாம். மேலும் சில மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்ட முதியோர்கள் ஆகியவர்களை கண்டுபிடித்து காப்பகத்தில் சேர்க்கப்படடுள்ளனர், அவர்களது புகைப்படங்களும், அவர்கள் பற்றிய விவரங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ள கணிணி மற்றும் மின் திரையில் திரையிட்டு காண்பிக்கப்படும். உறவினர்கள் அப்புகைப்படங்களை பார்த்து அடையாளம் கண்டு பிடிக்க இயலும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறினார்.

இந்த முகாமில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) இளங்கோவன், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், வடபாகம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அருள், முத்தையாபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அன்னராஜ், தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, உதவி ஆய்வாளர்கள் ரவிக்குமார், ராஜாமணி, சங்கர், நாகராஜன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் காணாமல் போன வழக்குகளின் மனுதாரர்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

போலி உதவி கமிஷனர் கைது – மாவட்ட எஸ்.பியின் ஸ்கெட்ச்

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -03,2021 முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தமிழகத்தை தவிர்த்து மற்றும் பல மாநில முதல்வர்களுடன் சந்தித்து போட்டோ எடுத்து அதை முகநூலில் பதிவு...

தற்போதைய செய்திகள்