84.7 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் விதமாக...

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு நோட்டிஸை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் ஒட்டினார்

திருநெல்வேலி – அக் :03

திருநெல்வேலி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற புலனாய்வு பிரிவு மற்றும் திருநெல்வேலி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் விதமாக 1098 அவசர உதவி எண்னை அனைவரும் தெரிந்துகொள்ள விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்கள் அறியும் வண்ணம் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் இன்று துவக்கி வைத்தார். மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழ்ந்தால் உடனடியாக 1098 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்தார். மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமியிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் என எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புலனாய்வு பிரிவைச் சேர்ந்த டிஎஸ்பி பிரகாஷ், காவல் ஆய்வாளர் வனிதா ராணி, உதவி ஆய்வாளர் ஜாபர், ராமர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் குழு தலைவர் திரு. சந்திரகுமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தனசீலன் சாம்ராஜ், பாதுகாப்பு அலுவலர் கணேசன், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சர்ச்சில் ஆகியோர் உடன் இருந்தனர்.

Previous article
தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளில், காணாமல் போனவர்களை விரைந்து கண்டு பிடித்து தீர்வு காணும் வகையில் 9 இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி ராஜ் மஹாலில் நடைபெறும் இந்த முகாமை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்
Next articleதூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளுக்காக இன்று 9 சிறப்பு முகாம்கள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் 34 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என தூத்துக்குடி மாவட்ட எஸ் பி ஜெயக்குமார் தெரிவித்தார்.
19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்