81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்றாவது கண் எனப்படும் சி.சி.டி.வி...

தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்றாவது கண் எனப்படும் சி.சி.டி.வி கேமராவை மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி – அக்: 08

இன்று தூத்துக்குடி, தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 25 சி.சி.டி.வி கேமராக்களை தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

மேற்படி தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவைப்பட்டி ஜங்ஷன், தாளமுத்து நகர் பஜார், ராஜாபாளையம் , செக்ரேட் ஸ்கூல் ராஜபாளையம் ஜங்ஷன், லூர்தம்மாள் புரம் ஜங்ஷன், சோட்டையன் தோப்பு பகுதி, மாதா நகர் ஜங்ஷன், தாளமுத்து நகர் காவல் நிலைய ஜங்ஷன், டேவிஸ்புரம் ஜங்ஷன், ஆ.பு.சு நகர் ஆகிய 10 இடங்களில், 25 சி.சி.டி.வி கேமராக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிசிடிவி கேமராக்களை தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் மின்திரை மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், குற்றங்களை குறைப்பதற்கு சி.சி.டி.வி கேமரா என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த கேமரா பொருத்துவதன் மூலம் இரண்டு நன்மைகள். ஓன்று குற்றங்கள் நடக்காமல் தடுப்பது, மற்றொன்று நடந்த குற்றத்தை கண்டுபிடிப்பது. சி.சி.டி.வி கேமராவின் மூலமே உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியும். சென்னையில் அனைத்து இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் குற்றங்கள் 50 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டு வருகிறது. இருப்பினும் இன்னும் ஓரிரு ஆண்டுகள் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும், எல்லோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதே போன்று இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்தும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் சீட் பெல்ட் அணிந்தும் செல்ல வேண்டும் என்றும் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பேசினார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ், பயிற்சி ஏஎஸ்பி அபிஷேக் குப்தா தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, உதவி ஆய்வாளர்கள் மகாராஜன், விஜயகுமார், மரிய இருதயம் , நாகராஜன், பயிற்சி உதவி ஆய்வாளர் உதயலெட்சுமி உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்