81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் சென்னை தமிழ்நாடு சட்டம், ஒழுங்கு புதிய ஏடிஜிபியாக ராஜேஷ்தாஸ் நியமனம்

தமிழ்நாடு சட்டம், ஒழுங்கு புதிய ஏடிஜிபியாக ராஜேஷ்தாஸ் நியமனம்

சென்னை – அக் : 01

லஞ்ச ஒழிப்புப்பிரிவு
புதிய இயக்குநராக ஜெயந்த் முரளி நியமனம்

தமிழக லஞ்ச ஒழிப்புப்பிரிவு புதிய இயக்குநராக ஏடிஜிபி ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு சட்டம், ஒழுங்கு ஏடிஜிபியாக ராஜேஸ்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காவல்துறை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஜிபியாக விஜயகுமார் கடந்த ஒன்னறை ஆண்டுகளாக அங்கு பதவி வகித்து வந்தார். அவர் இன்றுடன் ஓய்வு பெற்றார். அதனையடுத்து தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பதவி வகித்து வந்த ஜெயந்த் முரளி அதில் இருந்து மாற்றப்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை டிஜிபி அந்தஸ்தில் நியமிக்கப்பட்டு இருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை இயக்குநர் தற்போது ஏடிஜிபி அந்தஸ்துக்கு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேஸ்தாஸ் ஜெயந்த் முரளி வகித்து வந்த தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். அது தொடர்பாக நேற்று தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ராஜேஷ்தாஸ்
–––––––––––

சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபியான ராஜேஷ்தாஸ், முன்னாள் சுகாதாரத்துறை மற்றும் தற்போது வணிகவரித்துறை முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஏ, எம்பில் பட்டதாரியான இவர் ஒடிசா மாநிலம் தேன்கனல் என்ற ஊரைச்சேர்ந்தவர். 1989ம் ஆண்டு தமிழக ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். துாத்துக்குடி, ஓசூர், மதுரை தல்லாக்குளம் ஏஎஸ்பியாகவும், கோவை 4வது பட்டாலியன், திருச்சி ரயில்வே, தேனி, திருச்சி, துாத்துக்குடி, திருவள்ளூர் எஸ்பியாகவும் பணிபுரிந்தவர். பின்பு போலீஸ் பயிற்சிக்கல்லுாரி டிஐஜியாகவும், தமிழக கடலோர காவல்படை குழுமம், தென்மண்டல ஐஜி, சென்னை நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் மற்றும் சமூக நீதி கூடுதல் டிஜிபியாகவும் பணிபுரிந்தவர். தமிழகத்தில் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் போன்றவை நடந்த போது அது தொடர்பாக சட்டம் ஒழுங்கு பணியில் திறமையாக கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயந்த் முரளி

அதே போல ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரான ஜெயந்த் முரளி நேர்மையான அதிகாரி என பெயரரெடுத்தவர். எம்எஸ்சி பட்டதாரியான இவர் விவசாயம் தொடர்பான ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து பிஎச்டி டாக்டர் பட்டம் பெற்றவர். 1991ம் ஆண்டு தமிழக காவல்துறையில் கால்பதித்தார். நெல்லையில் ஏஎஸ்பியாகவும் எஸ்பியாகவும் அங்கேயே போலீஸ் கமிஷனராகவும் பணிபுரிந்தவர். மதுரை டிஐஜியாக பணியாற்றிய இவர் அதன்பிறகு அயல்பணியாக தொழிற்பாதுகாப்புப்படையில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் அவர் டிஜிபி அலுவலக நிர்வாகப்பிரிவு ஐஜியாகவும், பின்பு ஏடிஜிபியாக சிபிசிஐடியிலும், டிராபிக் பிளானிங் செல்லிலும், லஞ்ச ஒழிப்ப்பிரிவிலும் பணிபுரிந்தார். இரண்டு முறை குடியரசுத்தலைவர் பதக்கம் மற்றும் தமிழக முதல்வரின் பதக்கம் மற்றும் அத்திவரதர் பாதுகாப்புப்பணிக்காக சிறந்த விருதைப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்