94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு தமிழ்நாடு காந்தி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கமிஷ்னர் லோகநாதன் இளைஞர்கள் எதிர்காலம சிறப்பாக அமைய இளைஞர் ஒளிர்க்...

காந்தி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கமிஷ்னர் லோகநாதன் இளைஞர்கள் எதிர்காலம சிறப்பாக அமைய இளைஞர் ஒளிர்க் கவினுலகு என்ற புதிய திட்டத்தை துவக்கி வைத்தார்

திருச்சி -அக்: 02

செய்தியாளர் – முனைவர் மிர்ஷா

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாநகரின் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகுவதை தவிர்க்கும் பொருட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் “இளைஞர் ஒளிர்க் கவினுலகு” என்னும் புதிய திட்டம் இன்று 02ம்தேதி மாலை திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில், திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர கமிஷ்னர் லோகநாதன், தலைமை தாங்கி இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், திட்டத்தை விளக்கி கூறி துவக்கி வைத்தார்கள். இத்திட்டத்தின்படி அந்தந்த காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமலும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டும், அவர்களது வாழ்க்கையினை நல்வழிபடுத்தும் வகையில் போட்டி தேர்வுகளுக்கு தயார் படுத்துதல், வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தல், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவித்தல், அவர்களுக்கு உரிய உதவிகள் செய்து கொடுத்தல், இளைஞர்களுக்கு தீயப்பழக்கங்கள் ஏற்படுத்தும் அடிப்படை காரணங்களை கண்டறிந்து அவற்றிலிருந்து விலகியிருப்பதற்கு உரிய வழிவகைகள் இந்த திட்டத்தின் மூலம் செய்து தரப்படும். இத்திட்டத்தின் நோக்கம் இளைஞர்களுக்கு ஒளிமயமான, அழகான வாழ்க்கையை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதாகும். மேலும் இளைஞர்கள் தங்களது சக நண்பர்கள் தீய பழக்கங்களை தவிர்க்கும் பொருட்டு தாமாக முன்வந்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும், சட்ட விரோதமான செயல்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை பற்றிய தகவல்களை திருச்சி மாநகர பிரத்தியேக வாட்ஸ்அப் 96262-73399 என்ற எண்ணில் தெரிவிப்பதன் மூலம், திருச்சி மாநகரின் எந்த ஒரு இளைஞரும் போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுக்கமுடியும். தகவல் தெரிவிப்பவரின் இரகசியம் காக்கப்படும். உண்மையான தகவலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் திருச்சி மாநகரின் ஒவ்வொறு காவல் நிலைய அளவில் விரிவுபடுத்தப்படும்.
இந்நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு துணை கமிஷ்னர் பவன்குமார் ரெட்டி, மற்றும்‌ குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷ்னர் வேதரத்தினம், உதவி ஆணையர் நுண்ணறிவு பிரிவு, உதவி ஆணையர் ஸ்ரீரங்கம் சரகம், காவல் அதிகாரிகள் சுமார் 60 இளைஞர்கள் கலந்து கொண்டார்கள்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்