81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் அரியலூர் காணாமல் போனவர்களை மீட்கும் முயற்சியில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன் தீவிர முயற்சி

காணாமல் போனவர்களை மீட்கும் முயற்சியில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன் தீவிர முயற்சி

அரியலூர் – அக் : 10

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின் படி இன்று மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி தலைமையில் அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போனவர்களை மீட்டெடுப்பதற்காக அவர்களின் உறவினர்களுடன் மாவட்ட காவல் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் பற்றி வழக்குகள் பதியப்பட்டு கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையிலுள்ள வழக்குகளின் நிலவரம் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் காணாமல் போனவர்களின் உறவினர்களை கொண்டு சிசிடிஎன்எஸ் மற்றும் என்சிஆர்பி இணையதளங்களின் துணையுடன், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காணாமல் போனவர்கள் புகைப்படங்கள், அடையாளம் தெரியாமல் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் புகைப்படங்களை காண்பிக்கப்பட்டு காணாமல் போனவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டது. மேலும் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் செய்திகள் தெரியவந்தால் அதனை உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக்கொண்டார். மேலும் கொரோனா காலத்தில் முக கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் இருப்பது பற்றியும், சாலை பாதுகாப்பு பற்றியும் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட கேடயம் திட்டத்தின் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் மற்றும் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சுமதி ஆகியோர் உடன் இருந்தனர்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்